Also Watch
Read this
நடிகர் அவதாரம் எடுத்துள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும், டிசி படத்தின் டிரெய்லர் மே 15 மாலை வெளியாகிறது.

நடிகரான லோகேஷ்
கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி ஆகிய படங்களை இயக்கி LCU என்ற கான்செப்ட்டை உருவாக்கியவர் தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். ஆக்சனில் மாஸ் ஹிட் படங்களை தந்த லோகேஷ் கனகராஜ், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் டிசி என்ற படத்தில் ஹீரோவாக மாறி உள்ளார். இந்த படத்தில் தேவதாஸ் ரோலில் லோகேஷ், சந்திராவாக வாமிகாவும் நடித்து உள்ளனர். படத்திற்கு அனிருத் இசை. ஆக்சன் மோடில் வெளியாகி இருந்த டிசி கிளிம்ஸ் வீடியோவுக்கு வரவேற்பு இருந்த நிலையில், தற்போது டிரெய்லர் மே 15ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

சிவகார்த்திகேயனின் புது ரோல்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், நடிப்பையும் தாண்டி எஸ்.கே.புரொடெக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளார். இவரது தயாரிப்பில் வெளியான ராதிகா நடித்த, தாய் கிழவி வரவேற்பை பெற்றது. தொடர்ந்து நடிப்பு, தயாரிப்புகளில் கவனம் செலுத்தி வரும் சிவகார்த்திகேயன், பாடகராகவும் புது ரோலை கையில் எடுத்து உள்ளார். வேலும் மயிலும் என்ற கேப்ஷனில் சிவகார்த்திகேயன் எழுதி இருக்கும் ஆன்மீக பாடலின் ஆல்பம் வெளியாகி, ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளது.

சமந்தா போட்ட ஒரு போஸ்ட்
நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகை சமந்தா நடித்துள்ள படம் மா இன்டி பங்காரம். நந்தினி ரெட்டி இயக்கி இயக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். 80களில் நடந்த குடும்ப பின்னணியை சேர்ந்த அமைதியான பெண்ணின் அதிரடி ஆக்சன் கலந்த சவால்களை பேசும் படமாக மா இன்டி பங்காரம் உருவாகி உள்ளது. தற்போது ஜூன் 19ஆம் தேதி படம் ரிலீசாகும் என சமந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.

அடுத்தடுத்து ஓடிடி தரும் ட்ரீட்
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், மாதவன், சாரா அர்ஜூன் நடிப்பில் வெளிவந்த துரந்தர் தி ரிவெஞ்ச் படம் வரவேற்பை பெற்றது. இந்திய உளவாளியின் ஆக்சன் படமாக வெளிவந்த துரந்தர் தி ரிவெஞ்ச் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உள்ளது. இதேபோல் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத், பவானி ஸ்ரீ, சங்கவி, சங்கீதா உள்ளிட்டோர் நடித்து இருக்கும் சஸ்பென்ஸ் கலந்த கிரைம் படமான காளிதாஸ்-2, பிரைம் வீடியோ, சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகி உள்ளது. அடுத்ததாக நடிகர் ஆர்யா, கௌதம் கார்த்திக், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி இருக்கும் மிஸ்டர் எக்ஸ், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கு. இந்த வரிசையில் சற்குணம் இயக்கத்தில் அப்பாஸ், துஷாரா விஜயன் நடித்துள்ள எக்ஸாம் திரைப்படம் அமேசான் பிரைமில் மே 15ம் தேதி வெளியாகிறது.

ப்ளாஸ்ட் படத்துக்கு யு/ஏ சான்று
புதுமுக இயக்குநர் சுபாஷ் கே.ராஜ் இயக்கத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடித்து இருக்கும் ப்ளாஸ்ட் யு/ஏ சான்றிதழ் கிடைத்து உள்ளது. கோட், லவ் டுடே, டிராகன் போன்ற ஹிட் படங்களை தயாரித்த ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ப்ளாஸ்ட் படத்தை தயாரிக்கிறது. ஆக்சன் மற்றும் ஃபாமிலி ஜானரில் உருவாகி இருக்கும் இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் தயாரிப்பு நிறுவனத்தால் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கண்ணீர் விட்ட ஆர்.ஜே.பாலாஜி
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே மே14ம் தேதி காலை 9 மணிக்கே வெளியாக இருந்த சூர்யாவின் கருப்பு படம் திடீரென ரிலீசாகவில்லை. காலை 9 மணிக்கான சிறப்பு காட்சி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தயாரிப்பாளர்கள் தரப்பில் ஏற்பட்ட சில காரணங்களால் கருப்பு படம் வெளியாகவில்லை. இந்த நிலையில் படம் ரிலீசாகாத வருத்தத்தில் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி கண்ணீருடன் பேசிய வீடியோ வைரலாகி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved