Also Watch
Read this
By: Web Team

பொள்ளாச்சி முல்லை நகரில் ஆட்டிச குறைபாடுள்ள இளைஞன் கொல்லப்பட்ட வழக்கில் கைதான குற்றவாளிகளிடமிருந்து தங்கநகைகள் மற்றும் பணத்தை கையாடல் செய்ததாக மகாலிங்கபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.
மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்ட இளைஞர் வருண் கான் குறும்பு செய்ததால் அடித்தே கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளான கவிதா, அவரது கணவர் லட்சுமணன், இரு மகன்கள், பங்குதாரரான சாஜி ஆகியோரை கேரளாவில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் அணிந்திருந்த 18 பவுன் தங்க நகைகள், ஒன்றரை லட்சம் ரூபாயை காவல்நிலைய உதவி ஆய்வாளர் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved