Also Watch
Read this
By: Web Team

அமெரிக்காவின் கேம்பிரிட்ஜில் உள்ள புகழ்பெற்ற மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் ((MIT)) பட்டம் பெற்ற இந்திய வம்சாவளி மாணவி, பாலஸ்தீனத்தில் நடக்கும் இனப் படுகொலைக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.
மேகா வெமுரி என்ற அந்த மாணவி, பட்டமளிப்பு விழாவில் இஸ்ரேலிய ராணுவத்துடன் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் தொடர்ந்து உறவுகள் கொண்டிருப்பதை கண்டித்தார்.
பாலஸ்தீனத்தை பூமியிலிருந்து துடைத்தெறிய இஸ்ரேல் முயற்சிப்பதாகவும், இந்த கல்வி நிறுவனம் அதன் ஒரு பகுதியாக இருப்பது வெட்கக் கேடானது என்றும் அம்மாணவி விமர்சனம் செய்தார்.
இதையடுத்து, பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்க அம்மாணவிக்கு நிர்வாகம் தடை விதித்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved