news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news பல்கலை. வேந்தர் முதலமைச்சர் தான் - அன்புமணி திட்டவட்டம்
tv

Also Watch

tv

Read this

பல்கலை. வேந்தர் முதலமைச்சர் தான் - அன்புமணி திட்டவட்டம்

உயர்கல்வி அமைச்சர் குழப்பக் கூடாது

8

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பல்கலை. வேந்தர் முதலமைச்சர் தான் - அன்புமணி திட்டவட்டம்

பல்கலை. வேந்தர் முதலமைச்சர் தான் என உச்சநீதிமன்றமே உறுதி செய்த பின்னர் உயர்கல்வி அமைச்சர் குழப்பக் கூடாது என்று அன்புமணி கூறி உள்ளார்.

அமைச்சர் விஸ்வநாதன் பேச்சு, அதிர்ச்சி
இதுதொடர்பாக, பாமக தலைவர் அன்புமணி கூறி இருப்பதாவது;
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக முதலமைச்சர் தான் இருக்க வேண்டும் என்ற முந்தைய திமுக அரசின் நிலைப்பாட்டை இப்போதுள்ள த.வெ.க. அரசும் ஏற்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை, இந்த விவகாரத்தில் முதலமைச்சர் இறுதி முடிவு எடுப்பார் என்று, உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

திமுக அரசு வழக்கு
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்கலாம் என்று, தமிழக சட்டப்பேரவையில் முந்தைய திமுக ஆட்சியின் வெவ்வேறு காலகட்டங்களில் 10 சட்ட முன்வரைவுகள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், அந்த 10 சட்ட முன்வரைவுகளுக்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்காமலும், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியும் தாமதப்படுத்தி வந்த நிலையில், அவற்றுக்கு ஒப்புதல் அளிக்கும்படி ஆளுனருக்கு ஆணையிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் திமுக அரசு வழக்குத் தொடர்ந்தது.

வேந்தர் முதலமைச்சர் தான்
இதை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டத்தின் 142ஆம் பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக முதலமைச்சரை நியமிக்கும் சட்ட முன்வரைவுகளுக்கு ஒப்புதல் அளித்து விட்டது. இதன்படி இன்றைய சூழலில் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தர் முதலமைச்சர் தான், இதில் எந்த ஐயமும் இல்லை.

தமிழக அரசு செய்ய வேண்டியது...
இந்த சட்டங்களை செல்லாது என்று அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை முழுமையாக விசாரிக்காத சென்னை உயர்நீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வு , அந்த சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்தது. அதையும் செல்லாது என தீர்ப்பளித்து விட்ட உச்சநீதிமன்றம், அந்த வழக்கை 6 வாரங்களில் விசாரித்து தீர்ப்பளிக்கும்படி ஆணையிட்டுள்ளது. இத்தகைய சூழலில், தமிழக அரசு செய்ய வேண்டியதெல்லாம் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடித்து நடைமுறைக்கு கொண்டு வருவது தான். அதன் மூலம் தான் பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை விரைவாக நியமிக்க முடியும்.

மாற்றக் கூடாது
மாறாக, தமிழக அரசு சட்டங்களின் வாயிலாகவும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலமும் உறுதி செய்யப்பட்ட தமிழ்நாட்டு அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தர் முதலமைச்சர் தான் என்ற நிலைப்பாட்டை மாற்ற புதிய அரசு எந்த முயற்சியும் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் அது மாநில அரசின் உரிமைகளை தாரை வார்த்ததாக அமைந்து விடும்.
இவ்வாறு அன்புமணி தெரிவித்து உள்ளார்.

Related Link
அதிமுக அணிகள் இணைப்பு, புகார் மனுக்கள் வாபஸ்

அதிமுக அணிகள் இணைப்பு, புகார் மனுக்கள் வாபஸ்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சைக்கிளிங் சென்ற போது தவறி விழுந்த செயற்கை கால்

0
5 mins agoshare
தவறி விழுந்த செயற்கை கால்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved