news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news பிரதமருடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு
tv

Also Watch

tv

Read this

பிரதமருடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு

முதல்வருக்கு பிரதமர் வாழ்த்து

12

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

டெல்லியில், பிரதமர் மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், நேரில் சந்தித்துள்ளார். மாநில நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்து, வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதல்வருக்கு பிரதமர் வாழ்த்து
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக முதலமைச்சர் விஜய்க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

மாநில நலன் சார்ந்த கோரிக்கை
மேகதாது அணை விவகாரம், உரத் தட்டுப்பாடு அபாயம், நீட் விலக்கு, கல்வி நிதி, மீனவர் பிரச்சனை, மாநில உரிமை, நிதி சார்ந்த கோரிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் கூறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிவப்பு கம்பள வரவேற்பு
முதலமைச்சராக பதவியேற்ற பின் முதன்முறையாக டெல்லி சென்ற முதலமைச்சர் விஜய். தமிழ்நாடு இல்லத்தில் போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்புக் கம்பள வரவேற்பு தரப்பட்டது.

அமித்ஷா உடன் சந்திப்பு
உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோரையும் சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய். தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி, மேகதாது அணை விவகாரம், மீனவர் பிரச்சனை உள்ளிட்டவை குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சோனியா, ராகுல் உடன் சந்திப்பு
காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரையும் சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய். பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி சென்னை வந்த நிலையில், கூட்டணிக் கட்சி தலைவர்களை முதல்வர் விஜய் சந்திக்க உள்ளார்.

Related Link
பல்கலை. வேந்தர் முதலமைச்சர் தான் - அன்புமணி திட்டவட்டம்

பல்கலை. வேந்தர் முதலமைச்சர் தான் - அன்புமணி திட்டவட்டம்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர்கள் ராஜினாமா

0
1 min agoshare
திரிணாமுல் காங்கிரஸ்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved