Also Watch
Read this

டாஸ்மாக் பணியாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தால், மதுப்பிரியர்கள் அலை மோதி வருகின்றனர்.
டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்
திருப்பூர் மாவட்டத்தில், டாஸ்மாக் ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் மண்டல மேலாளரை சந்தித்து தங்களுக்கு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். முக்கியமாக, 'காலி பாட்டில் பை-பேக்' (Buy-back) திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

மாற்று பணி வேண்டும்
நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்டுள்ள சுமார் 30 டாஸ்மாக் கடைகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு உடனடியாக வேறு துறைகளில் மாற்றுப் பணி வழங்க வேண்டும். இரவு 10 மணிக்கு மேல் கணக்குகளைச் சரிபார்க்க அவகாசம் தர வேண்டும் அல்லது இரவு 9 மணிக்கே விற்பனையை நிறுத்த அனுமதிக்க வேண்டும். ஊழியர்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 197 டாஸ்மார்க் கடைகளும் பூட்டப்பட்டு, கடைகளின் சாவியை டாஸ்மார்க் மண்டல மேலாளர்களிடம் ஒப்படைக்க டாஸ்மாக் ஊழியர்கள், திருப்பூர் அங்கேரிபாளையம் சாலையில் உள்ள டாஸ்மார்க் மண்டல அலுவலகத்திற்கு சென்றனர். நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில் இன்று 2ஆவது நாள் கடையடைப்பு போராட்டம் தொடர்கிறது. நேற்று தனியார் பார்களில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. காங்கேயம், வெள்ளகோவில், முத்தூர் உள்ள 9 பார்களில் சுமார் 75 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை நடைபெற்றுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved