news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews சைக்கிளிங் சென்ற போது தவறி விழுந்த செயற்கை கால்
tv

Also Watch

tv

Read this

சைக்கிளிங் சென்ற போது தவறி விழுந்த செயற்கை கால்

மால்டா

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தவறி விழுந்த செயற்கை கால்

மாற்றுத்திறனாளி வீரருக்கு ஓடி வந்து உதவிய பாதசாரி  :

ஐரோப்பிய நாடான மால்டாவில் சைக்கிளிங் சென்ற மாற்றுத்திறனாளி தடகள வீரரின் செயற்கை கால் தவறி விழுந்த நிலையில், அவ்வழியாக சென்ற ஒருவர் ஓடி வந்து உதவிய வீடியோ நெகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

பாரா தடகள வீரரான Vincenzo Garofalo என்பவர், சைக்கிளிங் சென்ற போது எதிர்பாராத விதமாக அவரது செயற்கை கால் தவறி விழுந்தது. நிலைதடுமாறிய அவர் சைக்கிளை நிறுத்தி இறங்குவதற்குள், அவ்வழியாக சென்ற ஒருவர் உடனடியாக ஓடி வந்து சாலையில் கிடந்த செயற்கை காலை எடுத்து வந்ததோடு, சைக்கிளை ஓரமாக நிறுத்தவும் உதவி செய்தார்.

ஆபத்தாக மாறியிருக்க வேண்டிய சூழல், சற்றும் தாமதிக்காத உதவியால் நெகிழ்ச்சியான தருணமாக மாறியது.

மினி பேருந்து மீது ரயில் மோதி விபத்து :

பெல்ஜியத்தில் மினி பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 4 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். புகென்ஹவுட் ((Buggenhout)) நகரில் மாணவர்களை ஏற்றிக்கொண்டு மினி பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது அங்குள்ள லெவல் கிராசிங் அருகே மினி பேருந்து மீது ரயில் மோதியது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த மீட்புப்படையில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 4 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

"ஹார்மூஸ் நீரிணையில் சுங்க கட்டணம் நடைமுறை சட்டவிரோதம்" :

ஹார்மூஸ் நீரிணையில் சுங்க கட்டணம் நடைமுறை சட்டவிரோதம் என்றும் அதனை ஏற்க முடியாதது என அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்தபோது, சுங்க கட்டணம் எதுவுமின்றி ஹார்மூஸ் ஜலசந்தியை திறந்து விட வேண்டும் என்றும் ஈரானை தவிர, உலகில் எந்த நாடும் சுங்க நடைமுறையை ஏற்று கொள்ளவில்லை எனக் கூறியுள்ளார்.

ஈரான் துறைமுகங்களை முற்றுகையிடும் அமெரிக்க கப்பல்கள் : 

மேற்காசியா மற்றும் வளைகுடா பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் தொடர்ந்து பாதுகாப்பாக இருக்காது என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் துறைமுகங்களை அமெரிக்க கப்பல்கள் தொடர்ந்து முற்றுகையிடும் நிலையில் மேற்காசியா மற்றும் வளைகுடா பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தலான சூழல் தொடர்ந்து நிலவி வருகிறது. இதுகுறித்து ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி கூறும்போது, அமெரிக்க ராணுவ தளங்களுக்கு இந்த பகுதி பாதுகாப்பு அரணாக தொடர்ந்து நீடிக்காது என தெரிவித்துள்ளார்.

சூப்பர் மார்க்கெட்டில் புகுந்த முகமூடி கொள்ளையன்  :

அமெரிக்காவின் வர்ஜீனியாவில் சூப்பர் மார்க்கெட்டில் புகுந்த முகமூடி கொள்ளையன் பெண் பணியாளரை சுட்டுக் கொன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. குஜராத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வர்ஜீனியாவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பத்து ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

45வயதான மேக்னா என்ற அந்த பெண் கடையில் பில்லிங் கவுண்டர் (billing counter ) அருகே நின்ற போது, முகமூடி அணிந்தபடி வாடிக்கையாளர் போல் ஒருவர் உள்ளே புகுந்துள்ளார். முதலில், அப்பெண்ணிடம் பேசிய அவர் சில நொடிகளில் துப்பாக்கியை எடுத்து சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

Related Link
அரையடி நிலத்திற்காக ஏற்பட்ட மோதல்

அரையடி நிலத்திற்காக ஏற்பட்ட மோதல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர்கள் ராஜினாமா

0
1 hr 20 mins agoshare
திரிணாமுல் காங்கிரஸ்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved