Also Watch
Read this

தமிழக அரசின் விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பிற்கு, கண்டனம் தெரிவித்து நாகையில், விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விவசாய கடன் தள்ளுபடி
தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட விவசாய கடன் தள்ளுபடி பாரபட்சமாக உள்ளதை கண்டித்து, விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் நாகப்பட்டினம் அவுரி திடலில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய சங்கங்களின் கூட்டியக்க தலைவர் காவிரி தனபாலன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், பாரபட்சமான கடன் தள்ளுபடி அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்தும், தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அறிக்கைபடி விவசாய கடன் தள்ளுபடி உடனே வழங்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

கடன் தள்ளுபடி ஏமாற்று வேலை
இதுகுறித்து, காவிரி தனபாலன் கூறியதாவது:
தமிழக அரசு தற்பொழுது அறிவித்துள்ள கடன் தள்ளுபடி ஏமாற்று வேலை. இந்த அறிவிப்பை திரும்ப பெற்று, கடந்த காலங்களை போல, குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். தவெக தேர்தல் அறிக்கையில் கூறியது போல், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
முழுமையான கடன் தள்ளுபடியை வலியுறுத்தி வரும் 30ஆம் தேதி நாகையிலிருந்து பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்படும்.
இவ்வாறு காவிரி தனபாலன் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved