Also Watch
Read this
By: Manigandan Raja

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் முதல் சுற்று:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் போலந்து வீராங்கனையான இகா ஸ்வியாடெக் வெற்றிபெற்றார். ஆஸ்திரேலியாவின் எமர்சென் ஜோன்ஸை 6-க்கு 1, 6-க்கு 2 என்கிற நேர் செட் கணக்கில் எளிதில் வென்றார்.
மற்றொரு போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா 6-க்கு 2, 6-க்கு 2 என்கிற செட் கணக்கில் ஸ்லோவேனியாவின் வெரோனிகா எர்ஜவேவை வீழ்த்தினார்.
உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன் அதிர்ச்சி தோல்வி :

நார்வே செஸ் 2026 தொடரின் முதல் சுற்றிலேயே இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர்களான பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் ஆகியோர் அர்மகெடான் டைபிரேக்கரில் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.
அதேசமயம், உலக நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன் கிளாசிகல் ஆட்டத்திலேயே தோல்வியை சந்தித்தார். பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டரான அலிரேசா பிரூஸ்ஜா, கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இந்திய பேட்மிண்டன் வீரரான லக்சயா சென் 10 ஆம் இடம் :'

பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு வெளியிட்டு உள்ள ஆடவர் ஒற்றையர் தர வரிசை பட்டியலில் இந்திய பேட்மிண்டன் வீரரான லக்சயா சென் நீண்ட நாட்களுக்கு பின்னர் டாப் 10-ல் இடம் பிடித்திருக்கிறார். டந்த ஆண்டு மார்ச்சுக்கு பின்னர் அவர் இந்த பட்டியலில் இல்லாத சூழலில், 440 நாட்களுக்கு பின்னர் மீண்டும் அந்த இடத்திற்குள் வந்துள்ளார்.
இந்திய வீரர்களான சாத்விக்-சிராக் ஜோடி வெற்றி :
சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்களான சாத்விக்-சிராக் ஜோடி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. அமெரிக்காவின் சென் ஜி யி மற்றும் பிரெஸ்லி ஸ்மித் ஜோடியை எதிர் கொண்ட இந்திய வீரர்களான சாத்விக்-சிராக் ஜோடி 26க்கு 28, 21க்கு 15, 21க்கு 13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.
பி.வி. சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் :

சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தோனேசியாவின் புத்ரி குசுமா வர்தானியை எதிர் கொண்ட பி.வி.சிந்து 21க்கு 17, 21க்கு 18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved