Also Watch
Read this
By: Manigandan Raja

இட தகராறு :
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த புதூர்நாடு பகுதியைச் சேர்ந்த காளி(55) என்பவர் புதிதாக வீடு கட்டி வந்துள்ளார். இந்த நிலையில் அவருடைய பக்கத்து வீட்டுக்காரரான மனோகர்(50) மத்திய ரிசர்வ் காவல் படை ஓய்வு பெற்றவர் (CRPF) என்பவருக்கும் காளிக்கும் இடையே அவ்வபோது இட தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் மீண்டும் தகராறு ஏற்பட மனோகர் மறைத்து வைத்திருந்த அறிவாளால் காளியின் தலையின் மீது சரா மாறியாக வெட்டியுள்ளார். இதனால் நிலைகுலைந்த காளி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் இவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால்
முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்கு பதிந்து
முதியவர் காளியை சரா மாறியாக வெட்டிய மனோகரனின் (50) தாயார் தித்தியம்மாள் (70) மற்றும் மனைவி விஜயா(50) உள்ளிட்ட மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
அரை ஜான் இடத்திற்காக முதியவரை அறிவாலால் வெட்டி கொல்ல முயற்சி செய்த முன்னாள் ஓய்வு பெற்ற மத்திய ரிசர்வ் காவல் படை வீரரால் அப்பகுதியில் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved