news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news மேகதாது விவகாரம், சட்ட நடவடிக்கை எடுக்க முதல்வர் விஜய் ஆணை
tv

Also Watch

tv

Read this

மேகதாது விவகாரம், சட்ட நடவடிக்கை எடுக்க முதல்வர் விஜய் ஆணை

தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட உறுதி

9

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

காவிரி நதி நீர் வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களை ஆலோசித்து தொடர் சட்ட நடவடிக்கைகளை விரைவாக எடுத்திட வேண்டும் என்று, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகம் முயலும் நிலையில், முதலமைச்சர் விஜய் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

முதல்வர் ஆலோசனை
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;
தலைமைச் செயலகத்தில் இன்று மே25 ஆம் தேதி, முதல்வர் விஜய் தலைமையில் காவிரி நதிநீர் வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராக அமையக் கூடிய மேகதாது அணைத் திட்டத்துக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு இதுவரை மேற்கொண்ட சட்டப் போராட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் மனுக்கள்
கடந்த 30.11.2018 மற்றும் 07.06.2022 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தது. கடந்த 13.11.2025 அன்று இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேகதாது அணை திட்டத்துக்கு எவ்வித அனுமதியையும் வழங்கவில்லை என்பதையும், இது தொடக்க நிலையிலேயே இருப்பதாகவும், இத்திட்டம் முந்தைய தீர்ப்புக்கு உட்பட்டதா என்பதை மத்திய நீர்வளக் குழுமமே தீர்மானிக்க முடியும் என்று கூறி வழக்கை முடித்து வைத்திருந்தது எனத் தெரிவிக்கப்பட்டது.

முதல்வர் விஜய் ஆணை
உச்ச நீதிமன்றத்தில் 13.11.2025 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து, தமிழ்நாடு அரசால் சீராய்வு மனு 11.12.2025 தேதியில் தாக்கல் செய்யப்பட்டது. அச்சீராய்வு மனுவானது முந்தைய ஆட்சிக் காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் உள்விசாரணை நடைபெற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு தற்சமயம் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. மேற்கண்ட தீர்ப்பு விவரங்களைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிடவும், விவசாயிகளின் நலனைக் காத்திடவும், தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு முதல்வர் விஜய் பிறப்பித்துள்ளார்.

அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு
இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், பொதுப் பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Link
கொடுங்குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை - முதல்வர் ஜோசஃப் விஜய் உத்தரவு

கொடுங்குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை - முதல்வர் ஜோசஃப் விஜய் உத்தரவு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நூறு சதவீதம் குதிரை பேரம் - இன்பதுரை விமர்சனம்

2
0 min agoshare
நூறு சதவீதம் குதிரை பேரம் - இன்பதுரை விமர்சனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved