news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பேருந்தை வழிமறித்து ஓட்டுநரிடம் பயணிகள் வாக்குவாதம்
tv

Also Watch

tv

Read this

பேருந்தை வழிமறித்து ஓட்டுநரிடம் பயணிகள் வாக்குவாதம்

ஆதிவராகநல்லூர், கடலூர்

9

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நிற்காமல் சென்ற தனியார் பேருந்து

ஓட்டுநரிடம் பயணிகள் வாக்குவாதம் : 

கடலூர் மாவட்டம் சி சிதம்பரம் அருகே ஆதிவராகநல்லூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்த பகுதியானது கிராமத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி கல்லூரி மாணவர்கள் என வருகை தந்து பேருந்து ஏறும் முக்கிய பேருந்து நிறுத்தமாக இருந்து வருகிறது.

இந்த பேருந்து நிறுத்தமானது புவனகிரி- கடலூர் சாலையில் முக்கியமான பேருந்து நிறுத்தமாக நீண்ட காலமாக இருந்து வருகிறது.இந்த பேருந்து நிறுத்தத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் நிற்காமல் செல்வதும்.

பேருந்து பயணிகளை இறக்கி விடாமலும், ஏற்றிச்செல்லாமலும் இருக்கும் சம்பவங்கள் பலமுறை நடந்து வருகின்றன. அப்போதெல்லாம் பேருந்து பயணிகள் அருகிலுள்ள ஆர்டிஓ அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து ஆர்டிஓ வந்த பிறகு இரண்டு தரப்பினரையும் சமாதானமும் பேசி அனைத்து பேருந்துகளும் நிற்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொடர்ந்து
வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனாலும் அதற்குப் பிறகு சில நாட்கள் மட்டுமே பேருந்து நிற்கும் எனவும், அதற்குப் பிறகு பேருந்துகள் நிற்காமல் செல்கிறது எனவும் தொடர்ந்து பேருந்து பயணிகள் வேதனையோடு தெரிவித்து வந்த இந்நிலையில்.

அப்பகுதியைச் சேர்ந்த பேருந்து பயணி ஒருவர் புதுச்சேரியில் இருந்து புவனகிரி வழியாக சிதம்பரம் செல்லும் தனியார் பேருந்து ஆதிவராக நல்லூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று ஏறுவதற்காக கைகாட்டி நின்றுள்ளார்.

அப்போது பேருந்து நிற்காமல் சென்று விட்டது. இந்நிலையில் தனியார் பேருந்தானது மீண்டும் அவ்வழியாக வந்தபோது அதே பேருந்து பயணி தனியார் பேருந்தை நிறுத்த முயன்ற போது
பேருந்தானது சாலையின் குறுக்காக நிறுத்தப்பட்டது.

அப்போது பேருந்து பயணியும் தனியார் பேருந்து தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இப்பகுதி வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளுமே இதுபோன்று செய்தால் நாங்கள் எப்படி
பேருந்துகளில் பயணம் செய்ய முடியும்.

ஒரே ஒரு ஆள் நிறுத்தினாலும் பேருந்து நிறுத்த வேண்டும் தான் இல்லையென்றால் நான் ஆர்டிஓவிற்கு தகவல் சொல்லி அவர்களை வர சொல்கிறேன். அதற்கு பிறகு பேசிக்கலாம் என்று தனியார் பேருந்து நிர்வாகத்திற்கும் , பயணிக்கும் இடையே நீண்ட நேரம் வாககுவாதம் ஏற்பட்டது.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது மேலும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இரண்டு தரப்பிலும் சமாதானம் செய்து வைக்க முயன்றனர். இது போன்ற சம்பவங்கள்
அடிக்கடி நடந்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

Related Link
டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள்  போராட்டம்

டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நூறு சதவீதம் குதிரை பேரம் - இன்பதுரை விமர்சனம்

2
7 mins agoshare
நூறு சதவீதம் குதிரை பேரம் - இன்பதுரை விமர்சனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved