Also Watch
Read this
By: Manigandan Raja

குளோரின் வாயு கசிவு :
சென்னை ரெட்டேரியில் உள்ள குடிநீர் வாரிய அலுவலகத்தில் ஏற்பட்ட குளோரின் வாயு கசிவால் மூன்று ஒப்பந்த ஊழியர்கள் மூச்சுத்திணறலுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ரெட்டேரி பகுதியில் செயல்பட்டு வரும் சென்னை குடிநீர் வாரிய அலுவலகத்தில் இன்று பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் கள் திடீரென குளோரின் வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு பணியில் இருந்த குணசேகரன் வயது 27, ராஜா வயது 31 மற்றும் சரவணன் வயது 31 ஆகிய மூவரும் வாயுவை சுவாசித்ததால் திடீரென மூச்சுத் திணறலால்
பாதிக்கப்பட்டனர்.
உடனடியாக சக ஊழியர்கள் அவர்களை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனை க்கு அழைத்துச் சென்றனர். அங்கு மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு
திரும்பினர்.
பாதிக்கப்பட்ட மூவரும் கடந்த ஏழு ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் சென்னை குடிநீர் வாரியத்தில் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குளோரின் வாயு கசிவு எவ்வாறு ஏற்பட்டது..?
பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக வழங்கப்பட்டதா..? என்ற கோணங்களில் ராஜமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிநீர் வாரிய அலுவலகத்தில் ஏற்பட்ட குளோரின் வாயு கசிவு சம்பவம் ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved