Also Watch
Read this
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’ என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

காட்சி வாரியாக...
இதுதொடர்பாக, திமுக தலைவர் தமது சமூகவலை தள பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
* ‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’
* Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.

* Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
* Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.

* இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் உங்களுக்கு மக்கள் வாக்களித்தார்களா?
* ‘தூயசக்தி’ என்று சுய தம்பட்டம் அடித்தவர்கள், ‘துயர சக்தி’ என அம்பலப்பட்டு இருக்கிறார்கள்.
* என்டிஏ ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து ரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது.
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டு உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved