news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை தகவல்
tv

Also Watch

tv

Read this

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை தகவல்

வெப்பநிலை அதிகரிக்கும்

13

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தேனி மாவட்டங்களிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யலாம் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் கூறி இருப்பதாவது;
மத்திய கிழக்கு வங்கக்கடல் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் வரை தென்மேற்கு வங்கக்கடல், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் வழியாக சுமார் 3.1 கி.மீ. முதல் 5.8 கி.மீ. உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதனால், தமிழகத்தில் நாளை மே 26ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை மே 26
கோவை
திருப்பூர் மாவட்ட மலைப்பகுதி
நீலகிரி
ஈரோடு

சேலம்
தேனி
திண்டுக்கல்
கன்னியாகுமரி
மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை

வெப்பநிலை அதிகரிக்கும்
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 29ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னையில்...
சென்னை, புறநகர் பகுதிகளில் நாளை மே 26ஆம் தேதி, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 105 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 88 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.

மீனவர்களுக்காக...
தமிழக கடலோரப்பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் 29ஆம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில்...
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு
அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 11 செமீ
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 9 செமீ
பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம், திருச்சி மாவட்டம் நந்தியாறில் தலா 7 செமீ
கரூர் மாவட்டம் ஆனைப்பாளையம், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, நீலகிரி மாவட்டம் கெத்தை, சேலம் மாவட்டம் மேட்டூரில் தலா 6 செமீ மழை பதிவாகி உள்ளது.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Related Link
3 அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா ஏற்பு, தவெகவில் ஐக்கியம்

3 அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா ஏற்பு, தவெகவில் ஐக்கியம்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நான் பிரதமர் மோடியின் மிகப்பெரிய ரசிகன்

0
1 min agoshare
அதிபர் டிரம்ப்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved