news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews 'பார்க்கிங்' இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்
tv

Also Watch

tv

Read this

'பார்க்கிங்' இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்

Parking

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SK

சேயோன் படத்துக்கு பின் நடிக்க SK திட்டம் :

சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக பார்க்கிங் திரைப்படம் மூலம் பிரபலமான ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண், எம்.எஸ் பாஸ்கர் நடிப்பில் வெளியான பார்க்கிங் படம் 3 தேசிய விருதுகளை வென்று அசத்தியது. இந்நிலையில் ராம்குமார்-சிவகார்த்திகேயன் இணையும் புதிய படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

துல்கர் சல்மானின் புதிய படத்தின் பெயர் 'love story' :

துல்கர் சல்மான்-பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்துக்கு 'love story' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. முக்கிய காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவி இயக்கத்தில் காதல் ஜானரில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

19 ஆண்டுகளுக்குப் பின் ஜீவாவுடன் இணையும் அஞ்சலி :

'தலைவர் தம்பி தலைமையில்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்த ஜீவா, 19 ஆண்டுகளுக்குப் பின் அஞ்சலியுடன் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு ராம் இயக்கத்தில் வெளியான 'கற்றது தமிழ்' படத்தில் ஜீவாவும், அஞ்சலியும் இணைந்து நடித்திருந்தனர். தற்போது இருவரும் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தை 'அங்காடித் தெரு' வசந்தபாலன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் துருவ நட்சத்திரம் வெளியாகும் :

தனது 25 வருட சினிமா பயணத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 20 திரைப்படங்களை இயக்கிவுள்ளதாக இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பேட்டி ஒன்றில் கூறினார்.

அதில் துருவ நட்சத்திரம் படம் மட்டும் வெளியாகாமல் உள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் நிச்சயம் வெளியாகும் எனவும் கௌதவ் மேனன் நம்பிக்கை தெரிவித்தார். சுமார் 12 ஆண்டுகளாக துருவ நட்சத்திரம் வெளியாகாமல் கிடப்பில் உள்ளது.

நடிகர் ரவி மோகனின் மனைவி மற்றும் மகன்,மகளுடன் புகைப்படம் :

நடிகை குஷ்பு சுந்தர் சமீபத்தில் நடிகர் ரவி மோகனின் மனைவி மற்றும் மகன்,மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளது பேசும் பொருளாகியுள்ளது.

'மை ஃபேமிலி' என தலைப்பிட்டு அவர் வெளியிட்ட புகைப்படத்தில் குஷ்புவுடன் அவரது மகள்கள் அவந்திகா, ஆனந்திதா மட்டுமின்றி ஆர்த்தி ரவி, அவரது தாய் சுஜாதா விஜயகுமார் மற்றும் ரவி-ஆர்த்தி தம்பதியின் குழந்தைகள் ஆரவ், ஆயான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இந்த புகைப்படத்திற்கு ரவி மோகன் ரசிகர்கள் பல்வேறு வகையான எதிர்மறை கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Related Link
ஜெயராம், ஊர்வசி நடித்துள்ள

ஜெயராம், ஊர்வசி நடித்துள்ள "பரிமளா அண்ட் கோ"

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பனிச்சரிவு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

0
19 mins agoshare
மிகப்பெரிய அளவிலான பனிச்சரிவு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved