Also Watch
Read this
By: Manigandan Raja

தீமை செய்யும்போது சரி என்றால் அது முட்டாள் தனம் :
யாராவது நமக்கு தீமை செய்யும்போது சரி என்று சொல்லிக் கொண்டிருந்தால், அது முட்டாள் தனமாக இருக்கும் என இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கூறினார். அனைவரும் புத்திசாலியாகவும், சரியான இடத்தில் துணிந்து நிற்க வேண்டும் என்பதை உணர்ந்தவராகவும் இருக்க வேண்டும் எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.
அண்மையில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பின் டிராவிஸ் ஹெட் கை குலுக்க முயன்றபோது கோலி கண்டு கொள்ளாமல் சென்றது சர்ச்சையானது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கோலி மீது விமர்சனம் முன் வைக்கப்பட்டது.
ஐபிஎல் வரலாற்றில் ஜெய்ஸ்வால் புதிய சாதனை :

ஐபிஎல் வரலாற்றில் ஒட்டு மொத்தமாக முதல் ஓவரில் அதிக சிக்சர்கள் அடித்த ரோகித் சர்மாவின் சாதனையை ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் முறியடித்தார்.
மும்பை அணிக்கு எதிரான லீல் போட்டியில் 3 சிக்சர்களை விளாசியதன் மூலம் ஐபில் வரலாற்றில் முதல் ஓவரில் மட்டும் ஜெய்ஸ்வால் 14 சிக்சர்களை விளாசி சாதனை படைத்துள்ளார். முன்னதாக ரோகித் சர்மா 13 சிக்சர்களை விளாசியதே சாதனையாக இருந்தது.
இந்திய டி-20 கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் யார்?

இந்திய டி-20 கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கம்பீர் இடையே குழப்பமான சூழல் நிலவுகிறது.
சூர்யகுமாரின் கேப்டன் பதவி பறிக்கப்படுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ள நிலையில், அப்பதவிக்கு பரிசீலனையில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சனை தேர்வு செய்ய அஜித் அகர்கர் முனைப்பு காட்டவில்லை என தெரிகிறது.
அதேபோன்று சஞ்சு சாம்சனை கேப்டனாக்க கம்பீர் முயன்று வருவதால், அடுத்த கேப்டன் யார் என ரசிகர்களிடயே பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவி வருகின்றன.
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடர் :

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், சன் ரைசர்ஸ் ஹெதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. இதில், முதல் பிளே ஆப் தகுதிச்சுற்று நாளை தர்மசாலாவில் தொடங்குகிறது.
இதில், புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், 2-வது இடத்திலுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறும். அதேசமயம், தோற்கும் அணிக்கு சாம்பியன் பட்டத்தை வெல்ல மற்றொரு வாய்ப்பு கிடைக்கும்.
பாண்டியாவின் தலைமை எதிர்பார்த்த அளவு இல்லை :
நடப்பு ஐபிஎல் சீசனில் லீக் போட்டியுடன் மும்பை அணி வெளியேறிய நிலையில், பாண்டியாவின் தலைமை எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக அமையவில்லை என்பதை பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட் அதிருப்தி தெரிவித்துள்ளார். அதே நேரம் அடுத்த சீசனில் கேப்டன்சி மாற்றம் ஏற்படுமா என்ற கேள்விக்கு இது பற்றி பேச தற்போது சரியான நேரம் இல்லை என கூறிவிட்டு சென்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved