news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews குடியிருப்பு நலச்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
tv

Also Watch

tv

Read this

குடியிருப்பு நலச்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு

கண்டன ஆர்ப்பாட்டம் : 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நகராட்சிக்குட்பட்ட 2 ஆவது வார்டு செல்லப்பெருமாள் நகரில் ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள 2 ஆவது தெருவில், தனி நபருக்கு சொந்தமான நிலத்தில் தனியார் செல்போன் நிறுவனம் குடியிருப்புகளுக்கு மத்தியில் செல்போன் டவர் அமைக்க கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

குடியிருப்புகளுக்கு மத்தியில் செல்போன் டவர் அமைத்தால், அதிலிருந்து ஏற்படும் கதிர் வீச்சால் பெரியவர்கள், முதியவர்கள், குழந்தைகள் என பல தரப்பினர் நோய் பாதிப்புகளுக்கு ஆள் ஆவார்கள் என குடியிருப்பு வாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.


அதேபோல, நிலத்தடி நீர்மட்டமும், சிட்டுக்குருவிகள், பறவைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக, வீடுகளுக்கு மத்தியில் டவர் அமைக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். டவர் அமைக்கும் கட்டுமான பணிகளை நிறுத்த, சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

ஆனால், அதிகாரிகள் மனு மீது கண்டும் காணாமல் இருப்பதாக குடியிருப்பு வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால், அதிகாரிகள் மீது அதிருப்தி அடைந்த, அங்கு குடியிருக்கும் மக்கள், 100 கும் மேற்பட்டோர் திரண்டு, டவர் அமைக்கும் இடத்திற்கு எதிரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, டவர் அமைக்க பணிகள் தொடர்ந்தால், சாலை மறியலில் ஈடுபட போவதாகவும், அடுத்த கட்ட போராட்டங்களை அறிவிக்க உள்ளதாக மக்கள் எச்சரிக்கின்றனர்.

Related Link
லாரி தொழில் அதிபரிடம் லஞ்சம் கேட்ட சார்பதிவாளர்

லாரி தொழில் அதிபரிடம் லஞ்சம் கேட்ட சார்பதிவாளர்

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சைக்கிளிங் சென்ற போது தவறி விழுந்த செயற்கை கால்

0
4 mins agoshare
தவறி விழுந்த செயற்கை கால்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved