Also Watch
Read this
By: Manigandan Raja

கோடை விழா நிறைவு :
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் நடைபெற்று வரும் 49-வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சி இன்றுடன் நிறைவு மலர் கண்காட்சி காண ஏற்காட்டிற்கு குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுத்தோறும் ஏற்காடு கோடைவிழா மற்றும் மலர்க்காட்சி சிறப்பான முறையில்
நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில், இந்த ஆண்டு 49-வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க்காட்சி கடந்த 22.05.2026 வெள்ளிக்கிழமை அன்று தொடங்கி வைக்கப்பட்டு 31.05.2026 ஞாயிற்றுக்கிழமை இன்று வரை நடைபெற்று வருவதால்
இக்கோடை விழாவில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள்,செல்ல பிராணி கண்காட்சி .குழந்தைகள் போட்டி என அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெற்று முடிந்தது
இந்த இந்த நிலையில் இன்று நிறைவு நாளில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் காலை முதல் ஏற்காட்டிற்கு படையெடுத்து மலர்கண்காட்சியை கண்டு களித்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved