news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews திருப்பரங்குன்றம் தொகுதி மக்களுக்கு சிடிஆர் நன்றி
tv

Also Watch

tv

Read this

திருப்பரங்குன்றம் தொகுதி மக்களுக்கு சிடிஆர் நன்றி

திருப்பரங்குன்றம், மதுரை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சி டி ஆர் நிர்மல் குமார்

மக்களுக்கு சிடிஆர் நன்றி : 

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு சுமார் 42,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற
சட்டத்துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார்.

வார இறுதி விடுமுறை நாட்களில் மாலை நேரங்களில் தொகுதியில் ஒவ்வொரு பகுதி வாரியாக சென்று வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார் அந்த வகையில் இன்று கூத்தியார் குண்டு, கருவேலம்பட்டி சுற்றி உள்ள கிராமங்களுக்கு சென்று நன்றி தெரிவித்தார்.

அவருக்கு கிராம மக்கள் சரவெடி, வான வேடிக்கை, ஆள் உயர மாலை என உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கருவேலம் பட்டியில் அமைச்சர் நிர்மல் குமார் பேசும்போது:

எங்கேயும் மக்களுக்கு எதிராக இருக்கும் எந்த விஷயத்தையும் அனுமதிக்க மாட்டோம் செய்ய மாட்டோம். 10,15 வருடங்களாக என்ன கஷ்டப்பட்டீர்களோ அவை அனைத்தையும் சரி செய்து விடுவோம்.

உங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதிக் கொடுங்கள் எதுவாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் பேசி சரி செய்து விடுவோம். என்ன நினைத்து வாக்களித்தீர்களோ அதை அனைத்தும் நிறைவேற்றுவோம் வாக்களித்ததற்கு நன்றி.

பஸ் வசதி கேட்டு இருந்தீர்கள் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் போன வாரமே கொடுத்தாச்சு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தேவையில்லாத சட்டவிரோதமான
குவாரிகள் அடைத்தது அடைத்தது தான் திறக்க முடியாது.

ஒரு வாரத்திற்குள் மதுரை மாவட்டத்தில் மட்டும் 11க்கும் மேற்பட்ட குவாரிகள் அடைக்கப்பட்டுள்ளன கண்டிப்பா உங்களுக்கு எந்த தொந்தரவும் வராது நன்றி என்றார்.

Related Link
49 ஆவது கோடை விழா கோலாகலத்துடன் நிறைவு

49 ஆவது கோடை விழா கோலாகலத்துடன் நிறைவு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து 2-வது ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி...

0
3 hrs 36 mins agoshare
rcb 2026 winner








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved