Also Watch
Read this
By: Manigandan Raja

ராகுல் காந்திக்கு திரிணாமுல் எம்பி அபிஷேக் பானர்ஜி நன்றி :
தமக்கு ஆதரவு தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி நன்றி தெரிவித்துள்ளார். வன்முறையில் கொல்லப்பட்ட கட்சித் தொண்டரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற சென்றபோது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்திருந்தார்.
அதிநவீன உயர்ரக வெடிகுண்டு சோதனை: DRDO சாதனை :

ஹரியானாவில் அதிநவீன உயர்ரக வெடிகுண்டு சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.
இந்த சோதனை பஞ்ச்குலா மாவட்டம் ராம்கர் மலைத்தொடரில் உள்ள டெர்மினல் பாலிஸ்டிக்ஸ் ஆராய்ச்சி ஆய்வகத்தில் நடத்தப்பட்டது. ஆகவே, அருகிலுள்ள கிராம மக்களுக்கு உச்சகட்ட பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பனி அடர்ந்த பகுதியில் இரவு நேரத்தில் விபத்தில் சிக்கிய கார் :
ஹிமாச்சல பிரதேசத்தில் பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். சம்பா மாவட்டத்தில் பனி அடர்ந்த பயிர்கார்ஹ் சாக் பகுதியில் சென்ற கார் எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
இரவு நேரத்தில் விபத்து ஏற்பட்டதால் யாருக்கும் தெரியாத நிலையில், மறுநாள்தான் உள்ளூர் மக்களுக்கு தெரியவந்துள்ளது. தகவலறிந்து சென்ற போலீசாரும், மீட்புக் குழுவினரும் சடலங்களை மீட்டனர்.
பார்க்கிங் தகராறில் இளைஞரை சுட்ட சுற்றுலாப் பயணி :

இமாச்சல பிரதேசத்தின் கசோல் ((Kasol)) பகுதியில், பார்க்கிங் தகராறில் உள்ளூர் இளைஞர் மீது சுற்றுலாப் பயணி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
சுற்றுலா மையமான கசோலில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வன்முறை வெடித்தது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு எம்பி மீதும் தாக்குதல் :
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு எம்பி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய தகராறுகளில் கைதான திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களை விடுவிக்கக் கோரி.
ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சண்டிதாலா போலீஸ் ஸ்டேஷனுக்கு அக்கட்சியின் எம்.பி. கல்யாண் பானர்ஜி சென்றபோது, 20 பேர் அடங்கிய கும்பல் தாக்கியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved