Also Watch
Read this
By: Manigandan Raja

ஐபிஎல் கிரிக்கெட்டில் சீர்த்திருத்தங்கள் செய்ய வேண்டும் :
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சில முக்கிய சீர்த்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் வலியுறுத்தி உள்ளார். இம்பாக்ட் பிளேயர் விதிமுறையால் ஆல்ரவுண்டர்களுக்கு வாய்ப்பில்லாமல் போய்விடும் என எச்சரித்துள்ளார்.
அதேபோல, 6 ஓவர்களாகே இருக்கும் பவர்ப்ளேயே 4 ஓவர்களாக குறைக்க வேண்டும் எனவும், முதல் பவர்பிளே பேட்டர்களுக்கும், 2-வது பவர்பிளே பந்து வீச்சுக்கும் இருக்க வேண்டும் என வலியுறுத்து உள்ளார். மேலும், சிறந்த பந்து வீச்சாளர் 5 ஓவர்கள் வீச அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ரியான் பராக்குக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் அணியில் சேர்ப்பு :

முத்தரப்பு தொடருக்கான இந்தியா "ஏ" அணியில் ரியான்பராக்குக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான் "ஏ" அணிகள் மோதும் முத்தரப்புத் தொடர், இலங்கையில் ஜூன் 9-ம் தேதி தொடங்குகிறது.
இந்த தொடருக்கான திலக் வர்மா தலைமையிலான இந்தியா "ஏ" அணியில் இடம் பெற்றிருந்த ரியான் பராக்குக்கு தொடை பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் 3 மாத காலம் ஓய்வெடுக்க சூழல் ஏற்பட்டுள்ளதால், அவரை அணியில் இருந்து நீக்கிய பிசிசிஐ தேர்வுக்குழு, ருதுராஜ் கெய்க்வாட்டை சேர்த்துள்ளது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்வெரேவ் அசத்தல் :

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் போட்டியில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ், நெதர்லாந்தின் டி ஜாங் ஆகியோர் மோதினர்.
இந்த பரபரப்பான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடயி ஸ்வெரேவ் 7-க்கு 6, 6-க்கு 4, 6-க்கு1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
உக்ரைன், ருமேனியா வீராங்கனைகள் அபார ஆட்டம் :

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக்குடன் மோதியதில் எலினா ஸ்விடோலினா 4-க்கு 6, 6-க்கு 4, 6-க்கு 0 என்கிற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
அதேபோல, போலந்தின் இகா ஸ்வியாடெக், உக்ரைனின் மார்டா கோஸ்டியுக் மோதியதில், கோஸ்டியுக் வெற்றிபெற்றார். மற்றொரு போட்டியில் ருமேனியாவின் சொரானா சிர்ஸ்டியா 6-க்கு 3, 7-க்கு 6 என்ற செட் கணக்கில் சீனாவின் ஜியு வாங்கை தோற்கடித்தார்.
முதல்வராக பதவியேற்க உள்ள டிகே.சிவக்குமார் குற்றச்சாட்டு :
அரசியல் காரணங்களுக்காக ஐபிஎல் இறுதிப்போட்டி பெங்களூருவில் இருந்து அகமதாபாத்துக்கு மாற்றப்பட்டதாக, கர்நாடக மாநில முதலமைச்சராக பதவியேற்க உள்ள டிகே.சிவக்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், பெங்களூருவில் நடைபெற வேண்டிய இறுதிப்போட்டியை மாற்றி தங்களுக்கு அநீதி இழைத்து விட்டதாகவும், இதற்கு மேல் இதுபற்றி தாம் எதுவும் கூற விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், ஐபிஎல் இறுதிப்போட்டி பெங்களூருவில் நடைபெற்றிருந்தால், ஆர்சிபி ரசிகர்களுக்கு மிகச்சிறந்த தருணமாக அமைந்திருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved