Also Watch
Read this
By: Manigandan Raja

3 நாட்களில் ரூ.13 கோடி வசூலித்துள்ளதாக தகவல் :
நடிகர் அர்ஜூன் நடித்துள்ள "பிளாஸ்ட்" திரைப்படம் 3 நாட்களில் உலகளவில் 13 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த படம் திரையிடப்பட்டுள்ள பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடுவதால்.
வணிக ரீதியாகவும் வெற்றிப்படமாக மாறவுள்ளதால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அபிராமி, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.
"கருப்பு" திரைப்பட வெற்றியால் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் சூர்யா :
"கருப்பு" திரைப்படத்தின் வெற்றியால் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ள நடிகர் சூர்யா, படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணு ஆகியோருக்கு மகேந்திரா பிஇ 6 பேட்மேன் ரக காரை பரிசாக வழங்கி உள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா - த்ரிஷா இணைந்து நடித்த இந்த திரைப்படம் கடந்த 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சக்கைபோடு போட்டு வருகிறது. இதனால், சூர்யா உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளார்.
"ஹார்ட்டின்" திரைப்படம் ஜூன் 26-ம் தேதி வெளியாகும் :

"ஹார்ட்டின்" திரைப்படம் ஜூன் 26-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. "ஜில் ஜங் ஜக், பேட்டை, மகான்" ஆகிய படங்களின் மூலம் புகழ்பெற்ற நடிகர் சனந்த் நாயகனாக நடிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்குகிறார்.
மடோனா செபாஸ்டியன், இமையா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ள இந்த படத்திற்கு "நேரம், பிரேமம்" போன்ற மலையாள திரைப்படங்களுக்கு இசையமைத்த ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார். டிரிடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் அமோக வரவேற்பை பெற்றது.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் தனுஷ் :

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு சொன்ன கதை தனுஷுக்கு பிடித்திருப்பதாகவும், இந்தாண்டு இறுதிக்குள் படம் குறித்த அறிவிப்பு வரலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. "கர" திரைப்படத்தை தொடர்ந்து, தற்போது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தில் மம்மூட்டியும் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிரபல மூத்த பாடகி சுமன் கல்யாண்பூர் காலமானார் :
மும்பையை சேர்ந்த பிரபல மூத்த பாடகி சுமன் கல்யாண்பூர், தனது 89-வது வயதில் நேற்று இரவு காலமானார்.

முதுமை காரணமாக லோகண்ட்வாலாவில் உள்ள அவரது இல்லத்தில் இரவு சுமார் 8 மணியளவில் காலமானதாகவும், கடந்த சில நாட்களாகவே அவர் தாம் பாடிய பாடல்களையே கேட்டு வந்ததாகவும், அவரது நெருங்கிய நண்பரும், "சுமன் சுகந்த்" என்கிற பெயரில் அவரது வாழ்க்கை வரலாறை எழுதியவருமான மங்களா கடில்கர் தெரிவித்துள்ளார்.
1960 மற்றும் 1970-களில் தனது இனிமையான குரலால் புகழ்பெற்ற அவர், அந்த காலக்கட்டத்தின் முன்னணி பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கருடன் இணைந்து தனக்கென தனி இடத்தை பிடித்தவர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved