Also Watch
Read this
By: Manigandan Raja

கண்மாயில் இறங்கிய 5 கிராம மக்கள் :
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள கள்ளந்திரி, அம்மச்சியாபுரம், தொப்புலான்பட்டி, உள்ளிட்ட 5 கிராம மக்களுக்கு பாத்தியப்பட்ட ஐந்து கோவில் முத்தன் கண்மாய் உள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த கண்மாயில், ஆண்டு தோறும் அழகர்கோவில் சித்திரை திருவிழா முடிந்த பின்னர் பாரம்பரிய முறைப்படி சமத்துவ மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இன்று மீன்பிடித் திருவிழா நடைபெறும் என சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்களுக்கு சமூகவலைத்தளம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து.
இன்று அதிகாலை முதல் கள்ளந்திரி, அழகர்கோவில், பொய்கரைபட்டி, அப்பன்திருப்பதி, கடச்சநேந்தல், சத்திரப்பட்டி, மாங்குளம், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கண்மாய் சுற்றியுள்ள கரையில் ஒன்றுகூடி காத்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து, கிராமப் பெரியவர்கள் வந்து கோவிலில் வழிபாடு செய்து, மீன்களை பிடிக்க வெள்ளை வீசி அனுமதி அளித்தனர். இதனைத்தொடர்ந்து கண்மாய் கரையில் மீன்பிடி உபகரணங்களான கச்சா, ஊத்தா, வலை உள்ளிட்டவகைகளை கொண்டு மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கண்மாயில் இறங்கி மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.
இதில் நாட்டு வகை மீன்களான கட்லா, கெளுத்தி, கெண்டை, விரால், ரோகு, உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் பெரிய அளவில் கிடைத்த நிலையில், கண்மாயில் அதிகளவு ஆகாயத்தாமரை செடிகள் இருந்ததால் மீன்பிடி திருவிழாவில் பங்கேற்றவர்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.
மேலும், இது போன்று மீன்பிடி திருவிழா நடைபெறும் கிராம கோவில் கண்மாய்களில் வேண்டுதல் நிறைவேற சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மீன்குஞ்சுகளை வாங்கி விடுவதும், அதன் பிறகு நடைபெறும்.
சமத்துவ மீன்பிடி திருவிழா மூலம் இப்பகுதியில் நல்ல மழை பொழிந்து விவசாயம் செழிப்புடன், அனைத்து கிராம மக்களும் வேற்றுமை மறந்து ஒற்றுமையாக வாழ்வதற்கு வழிவகுக்கும் என இப்பகுதி கிராம பெரியவர்கள் தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved