news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பிறந்தநாள் கொண்டாடிவிட்டு திரும்பிய போது விபத்து
tv

Also Watch

tv

Read this

பிறந்தநாள் கொண்டாடிவிட்டு திரும்பிய போது விபத்து

அம்மன்பேட்டை, தஞ்சாவூர்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பனை மரத்தில் மோதி நொறுங்கிய கார்

பனை மரத்தில் மோதி விபத்து:

தஞ்சாவூர் மாவட்டம் அம்மன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தளபதி (36). சரித்திர பதிவேடு குற்றவாளி. இவருக்கு நேற்று பிறந்த நாள் என்பதால் தனது நண்பர்கள் தமிழரசன் (27), நிதீஷ் (25), சுதர்சன் (21), நரேன் (18), அபினேஷ் (21) ஆகியோருடன் பிறந்த நாள் கொண்டாத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் 6 சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் இன்று அதிகாலை 3 மணியளவில் திருவையாறில் இருந்து காரில் தளபதி உட்பட 6 பேரும் அம்மன்பேட்டைக்கு காரில்
திரும்பியுள்ளனர்.

கார் கண்டியூர் அருகே வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பனை மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் தளபதி மற்றும் அவரது நண்பர் தமிழரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் படுகாயமடைந்த நான்கு பேரையும் அவ்வழியே சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து நடுக்காவேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Link
போட்டோகிராபரை தாக்கிய இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு

போட்டோகிராபரை தாக்கிய இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக அரசில் அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

18
8 mins agoshare
தவெக அரசில் அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved