Also Watch
Read this

ஏழு விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்திய எல்எஸ்ஜி அபார வெற்றி பெற்று உள்ளது.

ஏழு விக்கெட் வித்தியாசத்தில்...
ஐபிஎல் 2026 தொடரில் மே 15ஆம் தேதி நடைபெற்ற முக்கிய லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, முக்கிய வெற்றியை பதிவு செய்தது. சென்னை அணிக்கு பிளேஆஃப் சுற்று வாய்ப்பில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

5 விக்கெட், 187 ரன்கள்
லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. சென்னை அணிக்காக கார்த்திக் சர்மா 42 பந்துகளில் 71 ரன்கள் குவித்து அணியை நிலை நிறுத்தினார். அவருடன் சிவம் துபே 32 ரன்களும், டிவால்ட் பிரேவிஸ் 25 ரன்களும் சேர்த்தனர். லக்னோ அணியின் ஆகாஷ் சிங் 3 விக்கெட் கைப்பற்றினார்.

லக்னோ அணி அதிரடி ஆட்டம்
188 ரன்கள் என்ற இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் வெறும் 38 பந்துகளில் 90 ரன்கள் குவித்து சென்னை பந்துவீச்சாளர்களை சிதறடித்தார். இதில் 9 பவுண்டரிகளும் 7 சிக்சர்களும் அடங்கும். அவருக்கு துணையாக ஜோஷ் இங்கிலிஸ் 36 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 32 ரன்களும் சேர்த்ததால் லக்னோ அணி 16.4 ஓவர்களில் 188 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சென்னை அணியின் பந்துவீச்சில் முகேஷ் சௌதரி மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்த போட்டியின் ஆட்டநாயகனாக மிட்செல் மார்ஷ் தேர்வு செய்யப்பட்டார்.

புள்ளிப்பட்டியலில் லக்னோ
இந்த வெற்றிக்குப் பிறகும் லக்னோ அணி 12 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் சென்னை அணி 12 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தில் தொடர்கிறது. பிளேஆஃப் சுற்றுக்கான போட்டி கடுமையாகி வரும் நிலையில், சென்னை அணியின் அடுத்தடுத்த போட்டிகள் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved