news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews டன் கணக்கில் கொட்டப்படும் ப்ளாஸ்டிக் குப்பைகள்
tv

Also Watch

tv

Read this

டன் கணக்கில் கொட்டப்படும் ப்ளாஸ்டிக் குப்பைகள்

குத்தம்பாக்கம், திருவள்ளூர்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
செம்மண் கொள்ளை எனப் புகார்

ப்ளாஸ்டிக் குப்பைகள் :

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி அடுத்த குத்தம்பாக்கம் கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான முந்தரிகாடு உள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள
இந்த காடு முழுவதும் செம்மண் பூமியாகும்.இதில் முந்திரி, பனை,தையலம்,வேம்பமரம் உள்ளிட்ட மரங்கள் மட்டுமின்றி பல்வேறு மூலிகை செடிகளும் நிறைந்து காணப்படுகிறது.

அதேபோல் மயில்,மான், காட்டுமுயல்,பன்றி,அனில் ஊர்வன ,பறவைகள் என பல்வேறு ஜூவராசிகளும் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் தற்போது இங்கு நடைபெற்று வரும் செம் கொள்ளையால் இந்த காடு முழுவதும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னைக்கு அருகே உள்ள இந்த வனப்பகுதி செம்மண் நிறைந்து காணப்படுவதால் இரவு நேரங்களில் லாரிகள் மற்றும் டிராக்டர் மூலம் கொள்ளை அடித்து ஒரு லோட் செம்மண் 10 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை விற்பனை செய்து வருகின்றனர்.

இங்குள்ள மண்ணை கொள்ளை அடிக்க இங்குள்ள மரம், செடிகள் இடையூறாக உள்ளதால் அதனையும் வெட்டி மரங்களையும் கொள்ளை அடித்து செல்கின்றனர்.இது ஒருபுறம் இருக்க வனப்பகுதியில் இரவு நேரங்களில் ப்ளாஸ்டிக் குப்பைகள் டன்,ரசாயன கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது.இதனால் வனப்பகுதியில் உள்ள ஒரு சில ஜீவராசிகளும் அங்கு வசிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இது போன்ற சட்டவிரோத செயல் குறித்து வனத்துறை,வருவாய் துறை,காவல்துறை என அனைருக்கும் தெரிந்தும் கண்டும் காணமல் இருந்து வருகின்றனர்.அதேபோல் கிராம நிர்வாக அலுவலர் துவங்கி மாவட்ட நிர்வாகம்,முதலமைச்சர் தனிப்பிரிவு என பலருக்கும் புகார் அளித்து எந்தவொரு நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகின்றது.

சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டு. இது குறித்து சமூக அலுவலர்கள் கூறுகையில் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த காட்டில் 60 சதவீதத்துக்கு மேல் மணல் கொள்ளை நடைபெற்றுள்ளதாகவும்,இதுவரை பலகோடி ரூபாய் மதிப்பிலான மண் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் மண் கொள்ளை அடிப்பதற்காக இங்குள்ள அரிய வகை மூலிகைகள், மரங்கள் அடியோடு அழிக்கப்படுவதால் இங்குள்ள ஜீவராடிகளும் தங்க இடமின்றி சுற்றி திரிவதாக வேதனை
தெரிவிகின்றனர்.இதனால் உடனடியாக இந்த செம்மண் கொள்ளையை தடுத்து மண் வளத்தையும் ,காட்டு வளத்தையும் காக்க வேண்டும் என்பது இவர்களது கோரிக்கை.

Related Link
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய இமாமுக்கு இங்கிலாந்தில் ஆயுள் தண்டனை

0
1 min agoshare
ஆயுள் தண்டனை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved