news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews இந்திய இமாமுக்கு இங்கிலாந்தில் ஆயுள் தண்டனை
tv

Also Watch

tv

Read this

இந்திய இமாமுக்கு இங்கிலாந்தில் ஆயுள் தண்டனை

அப்துல் ஹலீம்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆயுள் தண்டனை

தன்னிடம் ஜின் இருப்பதாகக் கூறி பெண்களை சீரழித்த நபர் :

தன்னிடம் ஜின் இருப்பதாகக் கூறி 7 பெண்கள் மற்றும் சிறுமிகளை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த இந்திய இமாமுக்கு இங்கிலாந்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அப்துல் ஹலீம் கான் என்பவர், தான் ஒரு 'ஜின்' என்றும், தன்னிடம் அமானுஷ்ய சக்திகள் இருப்பதாகவும் கூறிக்கொண்டு, ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது மதத் தலைவர் என்ற செல்வாக்கைப் பயன்படுத்தி, பெண்கள் மற்றும் சிறுமிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார்.

மிகப் பெரிய டைனோசர் புதைபடிவம் கண்டுபிடிப்பு :

தென்கிழக்கு ஆசியாவில் இதுவரை கண்டறியப்படாத மிகப் பெரிய டைனோசர் புதைபடிவம் தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 27 மீட்டர் நீளம், 27 டன் எடை கொண்ட இந்த ராட்சத டைனோசர், நீண்ட கழுத்துடைய தாவர உண்ணி வகையைச் சேர்ந்தது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இது சுமார் 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் மதிப்பீட்டுள்ளனர்.

உலகிலுள்ள ஆறுகளில் ஆக்ஸிஜன் அளவு குறையும் அபாயம் :

காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதலால் உலகம் முழுவதும் உள்ள ஆறுகளில், ஆக்ஸிஜன் அளவு குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்தியா மற்றும் வெப்பமண்டலப் பகுதிகளில் உள்ள ஆறுகள் இந்த நூற்றாண்டின் இறுதியில் போதுமான ஆக்ஸிஜனை இழந்து, உயிரற்ற மண்டலங்களை உருவாக்கக்கூடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

காங்கோவில் மீண்டும் எபோலா வைரஸ் பரவல் :

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில், 17வது முறையாக எபோலா வைரஸ் பரவியுள்ள நிலையில், அந்தத் தொற்றுக்கு இதுவரை 65 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடூரி மாகாணத்தில் எபோலா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதுவரை 246 பேருக்குப் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

அமெரிக்க பாடகர் கன்யா வெஸ்ட்டின் இந்திய கான்சர்ட் :

பிரபல அமெரிக்க பாடகர் கன்யா வெஸ்ட்டின் ((kanye west)) இந்திய இசை நிகழ்ச்சி பாதுகாப்பு காரணங்களால் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல்முறையாக கன்யா வெஸ்ட்டின் இசை நிகழ்ச்சி வரும் 23ம் தேதி டெல்லியில் நடைபெறும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் பங்கேற்பாளர்கள் மற்றும் இந்தியக் குடிமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Related Link
வெள்ளத்தில் தத்தளிக்கும் இலங்கை

வெள்ளத்தில் தத்தளிக்கும் இலங்கை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சந்தையில் வெள்ளிக்கிழமை மாலை பெரும் தீ விபத்து

0
1 hr 7 mins agoshare
நொய்டா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved