news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews கேன்ஸ் விழாவில் கலக்கும் கல்யாணி பிரியதர்ஷன்!
tv

Also Watch

tv

Read this

கேன்ஸ் விழாவில் கலக்கும் கல்யாணி பிரியதர்ஷன்!

கல்யாணி பிரியதர்ஷன்

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கல்யாணி பிரியதர்ஷன்!

நெக்லஸ் உடையுடன் உற்சாகமாக போஸ் :

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் 79ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ள மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷன், பிங்க் மற்றும் கருப்பு நிற உடையுடன் நெக்லஸ் அணிந்து கொண்டு உற்சாகமாக போஸ் கொடுக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 12ஆம் தேதி தொடங்கிய திரைப்பட விழா வரும் 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

'DC' திரைப்படத்தின் டிரைலர் வெளியானது :

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிப்பில் உருவாகி வந்த 'DC' திரைப்படத்தின் டிரைலரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. டிரைலர் முழுவதும் வன்முறை காட்சிகள் நிறைந்துள்ளதால் படத்துக்கு 'A' சான்றிதழே கிடைக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கருப்பு படத்தை பாராட்டிய நடிகர் கார்த்தி :

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடிப்பில் வெளியான கருப்பு திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், படத்தை பார்த்த நடிகர் கார்த்தி வெகுவாக புழந்து பேசியுள்ளார். கருப்பா....இதுக்கு மேல என்ன வேணும்?..சும்மா தெறிக்குது என அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

'கர' படத்தின் 'கண்ணம்மா என் கண்ணம்மா' பாடல் :

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜு நடிப்பில் வெளியான 'கர' திரைப்படத்தில் இடம் பெற்ற 'கண்ணம்மா என் கண்ணம்மா' வீடியோ பாடல் யூடியூபில் வெளியானது. 90-களில் நிகழ்ந்த வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் எதிர்ப்பார்த்த வசூலை பெற முடியவில்லை என கூறப்படுகிறது.

சீயான்-63க்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் :

ஆனந்த ஷங்கர்-விக்ரம் கூட்டணியில் உருவாகி வரும் சீயான்-63 திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் நிலையில், அவரின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. சர்வம் மாயா-வில் நடித்து பிரபலமான ரியா சிபு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Related Link
விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்க போவதில்லை என ரவி மோகன் உறுதி

விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்க போவதில்லை என ரவி மோகன் உறுதி

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சந்தையில் வெள்ளிக்கிழமை மாலை பெரும் தீ விபத்து

0
39 mins agoshare
நொய்டா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved