Also Watch
Read this
By: Manigandan Raja

30 பவுன் தங்க நகைகள் கொள்ளை :
கன்னியாகுமரி மாவட்டம் என். ஜி. ஓ. காலனி அருகே உள்ள குஞ்சன் விளை பகுதியில் ஸ்ரீ சரஸ்வதி ஜூவல்லர்ஸ் நகைக்கடை அன்பையா என்பவர் நடத்தி வருகிறார்.
கடந்த 13-ம் தேதி இரவு அன்பையா வழக்கம்போல் இரவு 9 மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இதையடுத்து நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த கும்பல் அன்பையாவின் நகைக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே உள்ள கண்ணாடியையும் கம்பியால் உடைத்து உள்ளே புகுந்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள் நகைக்கடையில் இருந்த 30 பவுன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளி பொருள்களையும் திருடி சென்றனர்.
இந்த திருட்டு சம்பவம் குறித்து அன்பையா அளித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அவர்கள் நகைக்கடை மற்றும் அந்த பகுதியில் இருந்த சி. சி .டி. வி. கேமராக்களில் பதிவாகி இருந்த வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையர்களின் உருவ அடையாளங்களை வைத்து நடத்திய விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
அவர்களில் நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்த மாயகிருஷ்ணன் (வயது 38) நாகர்கோவில் ஒழுகினசேரி அருகே உள்ள பறக்கிங் கால் பகுதியை சேர்ந்த ஐயப்பன் (வயது 36), ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் 3 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்கள் 3 பேரும் விரைவில் பிடிபடுவர் போலீசார் தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved