Also Watch
Read this
By: Manigandan Raja

இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு :
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கீரிப்பட்டியை சேர்ந்த மஞ்சுநாதசாமி (45) போட்டோகிராபரான இவர் கடந்த 2013ல் மனித உரிமைகள் ஆணை புகார் அளித்தார். அதில் அப்போதைய தம்மம்பட்டி இன்ஸ்பெக்டர் நடராஜன் மல்லியக்கரை போலீசில் என் மீது வழக்குப் பதிந்து கைது செய்து லாக்கப்பில் வைத்து கொடூரமாக தாக்கினார் என கூறியிருந்தார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணையில் 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, ஆணையம் உத்தரவிட்டது. கடந்த மார்ச் 4ல் இழப்பீடு தொகையை, ஆத்துார் டி.எஸ்.பி சத்யராஜ் வழங்கினார்.
மேலும் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க, ஆணையம் உத்தரவிட்டது. கடந்த 2012ல் தம்மம்பட்டி இன்ஸ்பெக்டர் நடராஜன் மீதான சட்டவிரோத செயல்கள், அதிகார துஷ்பிரயோக நடவடிக்கை குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பபட்டது
நடராஜன் 59, தற்போது சேலம் மாவட்ட மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார். கிருஷ்ணகிரியில் கடந்த 2019ல் பணிபுரிந்த போது, பேக்கரி உரிமையாளரிடம், 70,000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, லஞ்ச ஒழிப்பு ஒழிப்பு போலீசார் கைது தொடர்ந்து அவரை சஸ்பெண்ட் செய்து, அப்போதைய சேலம் டி.ஐ.ஜி.செந்தில்குமார் உத்தரவிட்டார்.
மேலும் சிறையில் இருந்த நடராஜனுக்கு, டி.எஸ்.பி., பதவி உயர்வுக்கு, முதல் கட்ட பயிற்சியில் பங்கேற்க இது சர்ச்சையாக மாற அழைப்பு ரத்து செய்யப்படடது. இந்த வழக்கு விசாரணையும் நடந்து வருகிறது.
ஆனால், 2013ல் போட்டோகிராபர் மஞ்சுநாத சுவாமி மீது பொய் வழக்கு போட்டதோடு சட்டவிரோதமாக கைது செய்து, காட்டுமிராண்டித்தனமாக தாக்கி, சித்ரவதை செய்தது தொடர்பாக, மனித உரிமை ஆணைய உத்தரவுப் படி இன்ஸ்பெக்டர் நடராஜன் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து நேற்று, மல்லியக்கரை போலீசார், நடராஜன் சட்டவிரோதமாக அடைத்து கொலை மிரட்டல், வைத்து தாக்குதல், கொலை மிரட்டல் உள்பட, 6 பிரிவு களில் வழக்கு பதிந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved