Also Watch
Read this
By: Manigandan Raja

விமானம் விழுந்து நொறுங்கிய காட்சி :
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான போர் 3 நாளாக தொடரும் நிலையில், குவைத் வான்வெளியில் அமெரிக்க போர் விமானம் F-15 விழுந்து நொறுங்கிய காட்சியை ஈரானின் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான், வளைகுடா நாடுகளான குவைத் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் குவைத்தில் விபத்துக்குள்ளான அமெரிக்க போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டதா? அல்லது பேட்ரியாட் SAM அமைப்பால் தாக்கப்பட்டதா என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved