news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news விசில் கோலம் போடுங்கள் - விஜய் வேண்டுகோள்
tv

Also Watch

tv

Read this

விசில் கோலம் போடுங்கள் - விஜய் வேண்டுகோள்

தவெக முழு தேர்தல் அறிக்கை வெளியீடு

7

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழக வெற்றிக் கழகத்தின் முழு தேர்தல் அறிக்கையை, கட்சித் தலைவர் விஜய் வெளியிட்டார்.

தவெக தேர்தல் அறிக்கை
சென்னையில் தவெக தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட விஜய் பேசியதாவது;
திருக்குறளின் அறம், பொருள், இன்பம் ஆகிய அதிகாரங்களின் அடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. இது மூன்றும் அரசியலுக்கு ஆட்சி அதிகாரத்துக்கும் ரொம்பவே முக்கியம். நம்முடைய தேர்தல் அறிக்கை நேர்மையான உத்தரவாதம். ஸ்டாலின் சார் மாதிரி ஏமாற்ற மாட்டோம். மற்றும் பலர் மாதிரி அள்ளிவிடமாட்டோம்.

தேர்தல் அறிக்கையை பாருங்கள்
இரண்டு பேருடைய தேர்தல் அறிக்கையையும் பாருங்கள். ஒருவர் 10,000 ரூபாய் கொடுத்தால் இன்னொருவர் 8,000 ரூபாய் கூப்பன் கொடுக்கிறார். இதிலிருந்து இருவருமே ஒரே குடையின் கீழ் உள்ள ஊழல் கூட்டம் என்பது தெரியவருகிறது. நம்மால் செய்ய முடிவதை மட்டுமே இங்கே சொல்கிறோம். சொல்லாததையும் ஆட்சிக்கு வந்த பிறகு செய்வோம்.

விசில் கோலம் போடுங்கள்
வேட்பாளர்களும் நானும் வேறில்லை. மே 4 ஆம் தேதி புதிய ஒளி கிடைக்க வேண்டும். பெண்கள் எல்லோருக்கும் ஒரு கோரிக்கை. உங்கள் வீட்டு வாசலில் விசிலை கோலமாகப் போடுங்கள். தமிழ்நாடுட்க்கு என்னவாக இருந்தாலும் என் தொகுதிக்கு நான் எம்.எல்.ஏ-தானே. பெரம்பூருக்கும் திருச்சி கிழக்கும் மாதம் ஒரு முறை கட்டாயம் வருவேன். நீங்கள் என்னைச் சந்தித்து கோரிக்கைகளை தெரிவிக்கலாம். நீங்கள் கேட்காமலே நான் எல்லாமும் செய்து கொடுப்பேன்,
இவ்வாறு விஜய் பேசினார்.

Related Link
தவெக தேர்தல் வாக்குறுதிகள் - முழு விவரம்

தவெக தேர்தல் வாக்குறுதிகள் - முழு விவரம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கோவில்பட்டியில் பொம்மை வாங்கி விட்டு பணம் தர மறுப்பு

3
33 mins agoshare
தூத்துக்குடி பொம்மை பிரச்சனை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved