Also Watch
Read this
By: Manigandan Raja

விமர்சனங்களால் உடைந்து போன விக்னேஷ் சிவன் :

விக்னேஷ் சிவன் இயக்கிய LIK திரைபடத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், ஒரு படைப்பை உருவாக்குவதற்கு பின்னால் எத்தனை பேரின் உழைப்பு இருக்கிறது என்பதை மக்கள் உணர வேண்டும் என விக்னேஷ் சிவன் உருக்கமாக பேசியுள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா மற்றும் கீர்த்தி ஷெட்டி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் Love Insurance Kompany. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படம், தற்போது சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'கர' திரைப்படம் :
விக்னேஷ் ராஜா-தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள 'கர' திரைப்படம் வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், வரும் 19ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாகியுள்ள இத்திரைப்படத்துக்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
6 நாட்களில் ரூ.50 கோடி வசூலித்த 'LIK' திரைப்படம் :

விக்னேஷ் சிவன்-பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகியுள்ள 'LIK' திரைப்படம் 6 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூல் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் 100 கோடி ரூபாய் வசூலை எட்டும் எனவும் நம்பப்படுகிறது.
மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள 'மக்கள் காவலன்' :

நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள 'மக்கள் காவலன்' திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் காட்சிகளை பார்த்த தயாரிப்பாளர் பா.ரஞ்சித், மணிகண்டனுக்கு இத்திரைப்படம் வணிக ரீதியிலான வெற்றியை பெற்றுத் தரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
சாதி அரசியலை மையமாக கொண்டு உருவாகியுள்ள 'மக்கள் காவலன்' திரைப்படத்தை ஜூன் அல்லது ஜூலை மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
'PEDDY' வெளியீட்டு தேதி மீண்டும் ஒத்திவைப்பு :

புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள 'PEDDI' திரைப்படம் வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், POST PRODUCTION பணிகள் முடிவடையாத காரணத்தால் வெளியீடு ஜூன் மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஒரு பாடலை படமாக்க வேண்டியுள்ளதாகவும், அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved