news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அதிமுக தொழில்நுட்ப அணி பிரமுகரை கைது செய்த போலீசார்
tv

Also Watch

tv

Read this

அதிமுக தொழில்நுட்ப அணி பிரமுகரை கைது செய்த போலீசார்

திருவள்ளூர்

9

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL ADMK Fight

தொழில்நுட்ப அணி பிரமுகரை கைது செய்த போலீசார் :

திருவள்ளூர் மாவட்ட அதிமுக தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளராக இருப்பவர் ஹரிஷ் பாலாஜி. திருவள்ளூர் நகராட்சி வி.எம்.நகரில் உள்ள அவரது வீட்டில் 2 நாட்களுக்கு முன்புநள்ளிரவில் மர்ம நபர்கள் முகமூடி அணிந்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று அவரது வீட்டின் மீது சரமாரியாக கல்வீசி தாக்கினர்.

இதனால் வீட்டின் கண்ணாடிகள் உடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா ஹரிஷ் பாலாஜியிடம் விவரங்களை கேட்டார். பிறகு சிசிடிவி யில் பதிவான காட்சிகளையும் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா, தேர்தல் தோல்வி பயத்தால் திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் மீது, எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் அதிமுக நிர்வாகிகளை தாக்கும் சம்பவத்தில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார். தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளிக்கப் போவதாக தெரிவித்தார்.

இது குறித்து திருவள்ளூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமோதரன் வழக்குப் பதிவு செய்து சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து தலைமறைவாக இருந்து வந்த கடம்பத்தூர் ஒன்றியம், காரணி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் விக்னேஷ்(25) என்ற இளைஞரை கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் திருவள்ளூரை சேர்ந்த சக்திவேல் என்பவர் நடத்தி வரும் ஷைன் ஸ்போர்ட்ஸ் அகாடெமியில் தடகள பயிற்சியாளராக இருப்பதாக வும் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளராக இருக்கும் ஹரிஷ் பாலாஜி கட்சியில் தன்னை வளரவிடாமல் தடுத்து வந்ததாகவும்.

அனைத்து நிகழ்ச்சிகளிலும் தன்னை மட்டம் தட்டி வந்ததால் விரக்தியிலிருந்த நான் அன்று இரவு சரக்கு அடித்து விட்டு போதையில் இருந்ததால் ஹரிஷ் பாலாஜியின் வீட்டின் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதாக
ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் தாமோதரன் விக்னேஷை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Link
கோவில்பட்டியில் பொம்மை வாங்கி விட்டு பணம் தர மறுப்பு

கோவில்பட்டியில் பொம்மை வாங்கி விட்டு பணம் தர மறுப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த 3 பேர் கைது

2
9 hrs 50 mins agoshare
லாட்டரி விற்பனை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved