21-ம் நூற்றாண்டு இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளுக்கானது என பிரதமர் மோடி கூறியுள்ளார். வியட்நாமின் லாவோஸ் நகரில் நடைபெறும் ஆசியான்- இந்தியா அமைப்பின் 21-வது உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர், கிழக்கு நோக்கிய இந்தியாவின் கொள்கை காரணமாக இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளுக்கு இடையிலான உறவுக்கு புது ஆற்றல் கிடைத்துள்ளதாக கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் ஆசியான் பிராந்தியத்துடனான இந்தியாவின் வர்த்தகம் 1,300 கோடி டாலராக அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவதற்காக இந்தியா சார்பில் 3 கோடி அமெரிக்க டாலர் நிதி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.