Also Watch
Read this
By: Manigandan Raja

மொஜ்தபாவுக்கு ரஷ்யாவில் சிகிச்சை :
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காயமடைந்த ஈரானின் புதிய சுப்ரீம் தலைவர் மொஜ்தாபா கமேனி, ரஷ்யாவால் காப்பாற்றப்பட்டு ரகசியமாக மாஸ்கோவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 28 ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் மொஜ்தபாவுக்கு கால் மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.
ஆனால் அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என கூறப்படும் நிலையில் எப்போது அவர் பொது வெளியில் தோன்றுவார் என்பது குறித்த குழப்பமும் நீடிக்கிறது. தாக்குதல் நடந்த உடன் அவர் டெஹ்ரானில் இருந்து ரஷ்யாவால் மீட்கப்பட்டு அந்த நாட்டின் ராணுவ விமானம் மூலம் மாஸ்கோவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
ஈரான் அதிபர் மசூத் பெஷஸ்கியானுடன் ரஷ்ய அதிபர் பதின் பேசி இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் உறுதியான தகவல் கிடைத்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved