Also Watch
Read this
பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம் தெரிவித்து உள்ளார். இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா CM saar? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றம்
இதுதொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது;
பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், தவெக அரசு விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தனர். ஆனால், தற்போது, 50,000 ரூபாய் வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று கூறி உள்ளனர்.

நம்பிக்கை மோசடி
இது, விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி. ஏற்கெனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று கூறிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தனர். இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கின்றனர்.

தயாராக இருக்க வேண்டுமா?
இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனதளவில் தயாராக இருக்க வேண்டுமா CM saar?
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டு உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved