Also Watch
Read this
அதிமுகவின் இசக்கி சுப்பையா தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
அம்பாசமுத்திரம் எம்எல்ஏ
நெல்லை அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சாா்பில் நின்று வெற்றி பெற்ற எம்எல்ஏ இசக்கி சுப்பையா, தமது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தாா்

கடிதத்தை அளிக்காமல் திரும்பினார்
முன்னதாக, ராஜினாமா கடிதத்தை தட்டச்சு செய்து எடுத்து வந்ததால் கடிதத்தை அளிக்காமல் இசக்கி சுப்பையா திரும்பினார். ‘கைப்பட எழுதி எடுத்து வாருங்கள்’ என சபாநாயகர் கூறியதால், ராஜினாமா கடிதத்தை கைப்பட எழுதி அளிப்பதற்காக திரும்பி சென்றுள்ளார். பின்னர், கைப்பட ராஜினாமா கடிதத்தை எழுதி வந்த இசக்கி சுப்பையா, அதனை சபாநாயகரிடம் வழங்கினார்.

கைப்பட எழுதிய கடிதம்
கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் முறைப்படி அளித்தார் இசக்கி சுப்பையா. ராஜினாமா கடிதத்தை தட்டச்சு செய்து எடுத்து வந்த நிலையில், அதனை சபாநாயகா் ஏற்க மறுத்ததால் கைப்பட எழுதி அளித்தாா்.

அதிமுகவில் 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா
நேற்றைய தினம் அதிமுக எம்எல்ஏக்களான மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார் ஆகிய 3 பேரும் தங்களது எம்ஏல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தனர். மேலும், அதிமுகவில் இருந்து விலகி, தவெகவில் இணைந்தனர். இந்நிலையில், இன்று இசக்கி சுப்பையா அதிமுக எம்ஏல்ஏ பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved