Also Watch
Read this
Posted on: Jun 15, 2025 07:33 AM
By: Web Team

பாமக நிர்வாகி சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை தமிழகத்தில் நிலவுவது வெட்கக்கேடானது என சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட பாமக நிர்வாகி சக்கரவர்த்தி துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளது உடற்கூராய்வு மூலம் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் தலைவிரித்தாடுவதை பார்க்கும் போது நாம் பாதுகாப்பாக தான் வாழ்கிறோமா? என கேள்வி எழுப்பியுள்ள அன்புமணி, சட்ட ஒழுங்கை பாதுகாக்க தவறிய, துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசு தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆட்சி செய்யும் உரிமையை இழந்து விட்டதாக கூறியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved