Also Watch
Read this
Posted on: Mar 25, 2026 10:37 AM
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 30ஆம் தேதி துவங்க உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளார்.

வேட்பாளர்கள் யார்?
அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றவர்கள் விவரம்:
1. எடப்பாடி - எடப்பாடி பழனிசாமி, பொதுச் செயலாளர்
2. வேப்பனஹள்ளி - கே.பி.முனுசாமி, துணைப் பொதுச் செயலாளர்
3. திண்டுக்கல் - திண்டுக்கல் சீனிவாசன், பொருளாளர், திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர்
4. நத்தம் - நத்தம் விசுவநாதன், துணைப் பொதுச் செயலாளர், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர்
5. தொண்டாமுத்தூர் - எஸ்.பி.வேலுமணி, தலைமை நிலையச் செயலாளர், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்

ராயபுரத்தில் ஜெயகுமார்...
6. குமாரபாளையம் - பி.தங்கமணி, அமைப்புச் செயலாளர், நாமக்கல் மாவட்ட செயலாளர்
7. ராயபுரம் - டி.ஜெயக்குமார், அமைப்புச் செயலாளர், வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர்
8. மயிலம் - சி.வி.சண்முகம், அமைப்புச் செயலாளர், விழுப்புரம் மாவட்ட செயலாளர்
9. மதுரை மேற்கு - செல்லூர் ராஜூ, அமைப்புச் செயலாளர், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர்
10. பாலக்கோடு - கே.பி.அன்பழகன், அமைப்புச் செயலாளர், தர்மபுரி மாவட்ட செயலாளர்

விராலிமலையில் விஜயபாஸ்கர்...
11. நன்னிலம் - சு.காமராஜ், அமைப்புச் செயலாளர், திருவாரூர் மாவட்ட செயலாளர்
12. வேதாரண்யம் - ஓ.எஸ்.மணியன், அமைப்புச் செயலாளர், நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர்
13. விராலிமலை - டாக்டர் சி.விஜயபாஸ்கர், அமைப்புச் செயலாளர் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர்
14. கோவில்பட்டி : கடம்பூர் ராஜூ, அமைப்புச் செயலாளர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர்
15. திருமங்கலம் - ஆர்.பி.உதயகுமார், புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர்

கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
16. சிவகாசி - கே.டி.ராஜேந்திரபாலாஜி, அமைப்புச் செயலாளர், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர்
17. மதுரவாயல் - பா.பென்ஜமின், அமைப்புச் செயலாளர், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர்
18. கலசபாக்கம் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி, விவசாயப் பிரிவுச் செயலாளர், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர்
19. திருப்பரங்குன்றம் - வி.வி.ராஜன் செல்லப்பா, அமைப்புச் செயலாளர், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர்
20. பவானி - கே.சி.கருப்பணன், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர்

21. ஜோலார்பேட்டை - கே.சி.வீரமணி, திருப்பத்தூர் மாவட்ட செயலாளர்
22. கரூர் - எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட செயலாளர்
23. அரியலூர் - தாமரை எஸ்.ராஜேந்திரன், அரியலூர் மாவட்ட செயலாளர்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved