news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news சின்னத்தை விட களப்பணியே முக்கியம் - ஜி.கே.வாசன்
tv

Also Watch

tv

Read this

சின்னத்தை விட களப்பணியே முக்கியம் - ஜி.கே.வாசன்

தாமரை சின்னத்தில் போட்டி ஏன்?

Posted on: Mar 27, 2026 07:42 AM

7

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வரும் சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ளார்.

அதிமுக கூட்டணியில்...
அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 5 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அந்த கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர், ஒட்டன்சத்திரம், கும்பகோணம் ஆகிய 5 தொகுதிகள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்த 5 தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலை, கட்சி தலைவர் ஜி.கே.வாசன் இன்று மார்ச் 27ஆம் தேதி வெளியிட்டார். சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை ஜி.கே.வாசன் சந்தித்தார். அப்போது 5 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

நல்ல நேரம் பார்த்து...
முன்னதாக, சென்னை, ஆழ்வார்பேட்டையில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், சரியாக 12.12 மணிக்கு வேட்பாளர்களை அறிவிப்பதாக தெரிவித்தார். 12.12 என்பது நல்ல நேரம் என நம்புவதால், அந்த நேரத்தில் வேட்பாளர்களை அறிவிக்கிறேன் என்று ஜி.கே.வாசன் கூறினார்.

கூட்டணி பலம் முக்கியம்
அமைச்சர்களுக்கு அவர்களது சொந்த தொகுதியில் கடும் எதிர்ப்பு உள்ளதால் எங்களுக்கு வெற்றி உறுதி. சைக்கிள் சின்னத்தை ஒதுக்க முடியது என்று தேர்தல் ஆணையம் கூறியதால், சைக்கிள் சின்னம் கிடைக்காததால் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்றும் பாஜகவுடன் நேரடிக் கூட்டணியில் இருப்பதால் தான் தாமரை சின்னத்தில் போட்டி என்றும் விளக்கம் தந்த ஜி.கே.வாசன், சின்னம் என்பதை விட களப்பணியும், கூட்டணியின் பலமும் முக்கியம் என்று உறுதியுடன் கூறினார்.

ஐந்து வேட்பாளர்கள்
அதிமுக கூட்டணியின் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ளார். அதன் விவரம்...

1. ஒட்டன்சத்திரம் - விடியல் எஸ். சேகர்
தமாகா மாநில துணை தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ.

2. ஈரோடு மேற்கு - எம்.யுவராஜா
தமாகா பொதுச் செயலாளர்

3. ராணிப்பேட்டை - வி.எம்.கார்த்திகேயன்
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தமாகா தலைவர்

4. கிள்ளியூர் - நிவின் சைமன்
தமாகா தென் மண்டல இளைஞரணி துணை தலைவர்

5. கும்பகோணம் - எம்.கே.ஆர்.அசோக் குமார்
தமாகா மாநில செயலாளர்


Related Link
அன்புமணிக்கே மாம்பழம் சொந்தம், அதிரடி

அன்புமணிக்கே மாம்பழம் சொந்தம், அதிரடி

             



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

லாக் டவுன் போன்ற சூழலுக்கு வாய்ப்பு இல்லை

0
2 mins agoshare
no lockdownbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved