news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news உதயநிதியின் நீட் ரத்து ரகசியம் என்ன? இபிஎஸ் கேள்வி
tv

Also Watch

tv

Read this

உதயநிதியின் நீட் ரத்து ரகசியம் என்ன? இபிஎஸ் கேள்வி

மக்களை ஏமாற்றும் திமுக, காங் - இபிஎஸ்

15

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நடிகர் சிவாஜி கணேசனின், தங்கமலை ரகசியம் திரைப்படத்தில் வரும் ’ராஜா காது கழுதை காது’ என்ற கதையை கிண்டலுடன் உதாரணமாக கூறிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீட் ரத்து ரகசியம் குறித்து உதயநிதி ஸ்டாலின் இப்போதாவது கூறுவாரா? என கேள்வி எழுப்பினார். மேலும், நீட் தேர்வை கொண்டு வந்ததும், திமுக காங்கிரஸ் தான், அதனை எதிர்ப்பதும் திமுக காங்கிரஸ் தான் எனவும் விமர்சனம் செய்தார்.

சேப்பாக்கத்தில் எடப்பாடி பழனிசாமி
சென்னை, சேப்பாக்கம் சட்டப்பேரவை தொகுதியில் வாக்கு சேகரித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது;
இது, துணை முதல்​வர் உதயநிதி தொகு​தி, அவர் எம்​எல்ஏ ஆவதற்கு முன்பு கொடுத்த வாக்​குறுதிகளை நிறை​வேற்​றி​னா​ரா? கழிப்​பறை வசதி செய்து கொடுப்​ப​தாகச் சொன்​னார், செய்​தா​ரா? 525 வாக்​குறு​தி​கள் கொடுத்த திமுக அவற்​றில் நான்​கில் ஒரு பங்கு கூட நிறை​வேற்​ற​வில்​லை. கல்விக் கடன் ரத்து செய்​வ​தாகச் சொல்லி செய்​ய​வில்​லை.

நீட் தேர்வு ரகசியம் என்ன?
நீட் தேர்​வுக்கு ரகசி​யம் இருக்​கிறது என்​றார். ‘தங்​கமலை ரகசி​யம்’ என்ற படம் இருக்​கிறது, நீட் ரகசி​யத்தை வெளி​யிட்​டால், அந்த கதை மாதிரி ஆகி​விடும் என்று பயப்​படு​கி​றார் உதயநி​தி. இன்​று​வரை நீட் விலக்கு பெற வேண்​டும் என்​பது ​தான் அதி​முக​வின் நிலைப்​பாடு.

காங்​கிரஸ் தலை​வரின் மனைவி நீட் தேர்​வுக்கு ஆதர​வாக வாதாடி​னார். செய்தது எல்லாம் காங்​கிரஸ். ஆனால், திமுக நம் மீது பழி போடு​வதை ஏற்​றுக் ​கொள்ள முடி​யு​மா? இது​தான் ஸ்டா​லினின் இரட்டை வேடம்.

கொரோனா காலத்தில்...
கொரோனா காலத்​தில் மக்​கள் பாதிக்​கப்​பட்ட நேரத்​தில் ஸ்டா​லின் சரி​யான ஆலோ​சனை தரவில்லை. அப்​போது எங்கே காணா​மல் போனீர்​கள்? என்று கேட்​டேன். அதற்கு புலம்​பு​கி​றார். காணா​மல் போனார் என்​று ​தான் பேசினேனே ஒழிய, தவறாகப் பேச​வில்​லை. அப்​படி பேசவேண்​டிய அவசி​யமில்​லை. ஆனால், நீங்​களும், உதயநி​தி​யும் எப்​படி கேவல​மாகப் பேசினீர்​கள், காலுக்​குள் இருக்கிறேன் என்று சொன்​னீர்​கள், இதை ஏற்​றுக்​கொள்ள முடி​யு​மா? நீங்​கள் ஒரு வார்த்தை பேசி​னால் 10 வார்த்தை திருப்பி பேச முடி​யும். நான் எந்த ஆயுதம் எடுக்க வேண்​டும் என்று தீர்​மானிப்​பது நானல்ல, எதிரி​கள் தான். 51 ஆண்​டு​கால அரசி​யல் வாழ்​வில் நான் யாரை​யும் தவறாக விமர்​சிக்​க​வில்​லை. என்னை அவதூறாகப் பேசி​னால் வேடிக்கை பார்க்க மாட்​டேன். உடனுக்​குடன் தகுந்த பதிலடி கொடுப்​பேன்.

மூன்றே மாதத்தில் ஒழிக்கப்படும்
தமி​ழ​கத்​தில் எங்கு பார்த்​தா​லும் மூலை ​முடுக்​கெல்​லாம் கஞ்சா கரைபுரண்டு ஓடு​கிறது. போதைப் பொருள் நிறைந்த மாநில​மாக மாறி​விட்​டது தமி​ழ​கம். இதனால், மாண​வர்​கள், இளைஞர்​கள், பொது​ மக்​கள் பாதிக்​கப்​படு​கின்​ற​னர். போதை ஆசாமிகளால் கொலை, கொள்​ளை, பாலியல் வன்​கொடுமை நடக்​காத நாளே இல்​லை. 2 வயது சிறுமி, பாட்​டியைக் கூட விட்​டு​வைக்​க​வில்​லை. அதிமுக ஆட்சி அமைந்​தவுடன் மூன்றே மாதத்​தில் கஞ்சா ஒழிக்​கப்​படும். இந்​தி​யா​வுக்கே முன் மாதிரி மாநிலம் தமிழ்​நா​டாம், ஊழல் செய்​வ​தில், கடன் வாங்​கு​வ​தில் தான் தமிழ்நாடு முதலிடத்​தில் உள்​ளது.
இவ்​வாறு பேசி, இபிஎஸ் வாக்கு சேகரித்தார்.

Related Link
காரைக்குடியில் விஜய் பிரச்சாரம்

காரைக்குடியில் விஜய் பிரச்சாரம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பனிச்சரிவு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

0
1 hr 2 mins agoshare
மிகப்பெரிய அளவிலான பனிச்சரிவு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved