தண்டனையின்றி ஒரே ஒரு கொலை செய்ய பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டுமென, மகாராஷ்டிராவின் சரத் பவார் அணியின் தேசியவாத காங்கிரஸ் பெண் தலைவர் ரோஹிணி கட்ஸே குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். உலக மகளிர் தினத்தையொட்டி கோரிக்கை விடுத்துள்ள அவர், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய வேண்டும் என்ற மனநிலையை கொல்ல தாங்கள் விழைவதாக அவர் தெரிவித்துள்ளார்.