news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news அண்ணி குடும்பத்தை கறுவறுக்க பிளான்
tv

Also Watch

tv

Read this

அண்ணி குடும்பத்தை கறுவறுக்க பிளான்

மங்களதண்டா, தெலங்கானா

26

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தூங்கி கொண்டிருந்த தனது அண்ணனின் மாமியார் கழுத்தில் மின்சாரகம்பியை சுற்றி கரண்ட் ஷாக் கொடுத்த இளைஞர். மாமியார் கதையை முடித்த கையோடு மாமனார் மற்றும் அண்ணியின் மீதும் கரண்ட் ஷாக்கை கொடுத்து கொலை செய்ய முயற்சி. கொழுந்தனின் மூர்க்கத்தனமான செயலால் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அண்ணி. அண்ணனின் மாமியாரை இளைஞர் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்தது ஏன்? அண்ணியின் குடும்பத்தையே இளைஞர் கறுவறுக்க நினைத்ததற்கான பின்னணி என்ன?

நள்ளிரவில் பக்கத்து வீட்டில் இருந்து கேட்ட அலறல் சத்தம்
நடுராத்திரி பக்கத்து வீட்ல அலறல் சத்தம் கேட்டதால அக்கம்பக்கத்துல உள்ளவங்க ஓடிவந்து பாத்துருக்காங்க. அப்போ, அந்த வீட்ல இருந்த பொண்ணு உடம்புல கத்திக்குத்து காயங்களோட வலியால கதறிருக்காங்க. பக்கத்துலயே அந்த பொண்ணோட அப்பாவும் வலியில போராடிருக்காரு. அதேமாதிரி அந்த பொண்ணோட அம்மா மூச்சு பேச்சில்லாம கெடந்துருக்காங்க. என்ன ஆச்சு? யாரு என்ன செஞ்சானு எதுவுமே புரியாத அக்கம்பக்கத்தினர் உடனே போலீசுக்கு போன் பண்ணி தகவல் சொன்னதோட 3 பேரையும் மீட்டு ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வச்சிருக்காங்க. இதுக்குமத்தியில, சம்பவ இடத்துக்கு வந்து மக்கள்கிட்ட விசாரணை நடத்துன போலீசார் ஹாஸ்பிட்டலுக்குப்போய் சிகிச்சையில இருந்த பொண்ணுக்கிட்ட விசாரணை நடத்திருக்காங்க. அப்பதான், என்ன நடந்துச்சுங்குற விஷயமே முழுமையா தெரியவந்துச்சு.

அண்ணன் ரமேஷ், தம்பி ராஜேசுக்கிடையே சொத்து பிரச்சனை
தெலங்கானா மாநிலம், மங்களதண்டா கிராமத்தை சேர்ந்தவங்கதான் சகோதரர்கள் ரமேஷ், ராஜேஷ். இவங்க ரெண்டுபேருக்குமே பலநாளா சொத்து பிரச்சனை இருந்துருக்குது. அப்பாவோட சொத்துல மெயின் ரோட்டுல இருக்கக்கூடிய சொத்து எல்லாமே தனக்குதானு சண்டை போட்ருக்காரு தம்பி ராஜேஷ். கிராமத்துல உள்ள சொத்தவச்சி நான் என்ன பண்றது? அதோட மதிப்பும் குறைவுதான், அதனால மெயின் ரோட்டுல இருக்கக்கூடிய சொத்து தனக்குதான் வேணும், விட்டுக்குடுக்கமாட்டேனு விடாப்பிடியா இருந்துருக்காரு அண்ணன் ரமேஷ். அண்ணன் தம்பிக்குள்ள நடந்த சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாம பெற்றோர்களே திண்டாடிருக்காங்க. இதுக்குமத்தியில அண்ணன் ராமேஷ் அஞ்சலிங்குற பொண்ண கல்யாணம் பண்ணிருக்காரு.

Related Link
மனைவி உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள் தண்டனை

மனைவி உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள் தண்டனை


அண்ணி மற்றும் அவரது பெற்றோர் மீது ராஜேசுக்கு ஆத்திரம்

வீடுகட்டி தனிக்குடித்தனம் போகணும், அதனால மெயின் ரோட்டுல உள்ள இடத்தை என்பேருக்கு எழுதி வைங்க, அங்க வீடுகட்டினாதான் வேலைக்கு போயிட்டு வர ஈசியா இருக்கும்னு பெற்றோர்கிட்ட கேட்ருக்காரு ரமேஷ். அதேமாதிரி, அஞ்சலியோட அப்பா அம்மாவும் அந்த இடத்தை எழுதி குடுங்க வீடு கட்ட மருமகனுக்கு நாங்க பணம் குடுக்குறோம்னு சொல்லிருக்காங்க. ஏற்கெனவே அண்ணனும் தம்பியும் குறிப்பிட்ட அந்த ஒரு இடத்துக்காக தான் எலியும் பூனையுமா இருக்காங்க, அந்த இடத்தையே சம்மந்தியும் எழுதிக்குடுக்க சொன்னதால ரமேஷோட பெற்றோருக்கு என்ன பண்றதுனே தெரியல. இதையெல்லாம் கவனிச்ச ராஜேஷ், தன் பெற்றோர்கிட்ட அந்த சொத்த அண்ணனுக்கு எழுதி வச்சா நடக்குறதே வேறனு மிரட்டிருக்காரு. அதேமாதிரி, அண்ணனோட மாமியார், மாமனார், அண்ணி அஞ்சலி மேல ராஜேஷோட கோபம் திரும்பிருக்குது.

மது குடித்துவிட்டு இரவு 12 மணிக்கு வீட்டுக்கு வந்த ராஜேஷ்
இதுக்குமத்தியில, அஞ்சலியை பாக்குறதுக்காக அவங்க அப்பா-அம்மா மகளோட வீட்டுக்கு வந்துருக்காங்க. ஏற்கெனவே அண்ணியோட பெற்றோர் மேல கொலைவெறி கோவத்துல இருந்த ராஜேஷ், உங்க மருமகனுக்கு உங்களோட சொத்த குடுக்கணும், எங்கவீட்டு சொத்த எப்படி பிரிக்கணும்னு நீங்க சொல்ல வேண்டாம்னு சண்டை போட்ருக்காரு. அடுத்து, ஒயின்ஷாப்புக்குப்போய் மது குடிச்சிட்டு நைட் 12 மணிக்குமேல வீட்டுக்கு வந்துருக்காரு. அண்ணனோட மாமியாரும், மாமனாரும் அசந்து தூங்கிட்டு இருந்தத பாத்து ஆத்திரத்தோட உச்சிக்குப்போன ராஜேஷ், மின்கம்பியை மாமியார் கம்சாலி கழுத்துல சுத்தி கரண்ட் ஷாக் குடுத்துருக்காரு. அதுல, மாமியார் உயிரிழந்துட்டாங்க.

ராஜேஷை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்
அடுத்து, அண்ணனோட மாமனாரையும் அதே மெத்தேட்லயே கொலை பண்ண போயிருக்காரு. ஆனா, படக்குனு எந்திரிச்ச மாமனார் கத்தி கூச்சல் போட்ருக்காரு. அப்ப, பக்கத்து அறையில தூங்கிட்டு இருந்த அஞ்சலி ஓடிவந்து கொழுந்தனை அடிச்சிருக்காங்க. அதனால, டென்ஷன் ஆன ராஜேஷ் அண்ணி அஞ்சலியையும் கத்தியால குத்தி கொலை செய்ய முயற்சி பண்ணிருக்காரு. அப்பதான், அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்துல உள்ளவங்க ஓடி வந்துருக்காங்க. அதுக்குப்பிறகுதான் நடந்த எல்லாமே வெளிய வந்துருக்குது. அண்ணனோட மாமியாரை கொலை செஞ்சிட்டு தெருவுல சுத்திட்டு இருந்த ராஜேஷை போலீசார் கைது பண்ணி சிறையில தள்ளிட்டாங்க.

Related Link
கோடிகளில் வாங்கிய வீடு ஜீரோ ஆன கதை

கோடிகளில் வாங்கிய வீடு ஜீரோ ஆன கதை

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

1
7 hrs 8 mins agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved