Also Watch
Read this
By: Fyrose Banu

இன்னொரு மனிதன் இருக்கும் வரை இங்கு யாரும் அனாதை இல்லை என அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நாகை மாவட்ட குழந்தைக்கு நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் உருக்கமாக பேசி உதவி கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமி
பனங்குடி சமத்துவபுரம் கிராமத்தை சேர்ந்த ஹரிதாஸ் துர்கா தேவி தம்பதியினரின் ஒன்றரை வயது குழந்தை தனன்யா தசைனார் வலுவிழப்பு என்ற அரியவகை நோயால பதிக்கப்பட்டுளளார்.இந்நிலையில் சிறுமிக்கு மருத்துவ உயர் சிகிச்சை அளிக்க 9 கோடி ரூபாய் தேவைப்படுவதால் குழந்தையின் பெற்றோர் நிதி திரட்டி வருகின்றனர்.

சிறுமிக்கு உதவக்கோரி பார்த்திபன் வீடியோ
பல்வேறு அரசியல், திரை பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள், வீடியோ வெளியிட்டும் உதவி கேட்டு வருகின்றனர். அந்த வகையில் திரைப்பட நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் குழந்தைக்கு உதவ வேண்டுமென பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved