துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், திராவிட மாடல் ஆட்சிக்கு வலுசேர்க்கும் வகையில் அவர் செயல்படுவார் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். விழுப்புரத்தில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அறிவாலயத்தில் மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.