Also Watch
Read this
2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 33ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று வெற்றியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதிவு செய்தது.

மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு :
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறப்பான பவர்பிளே அமைந்தது. பவர்பிளே ஓவர்களில் 73 ரன்களை எடுத்து 2 விக்கெட்டை இழந்தது.

வந்தார் சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து நடப்பு தொடரில் தனது 2ஆவது சதத்தை பதிவு செய்தார். சஞ்சு சாம்சன் 54 பந்துகளில் 10 பவுண்டரி, 4 சிக்ஸர் என 101 ரன்களை குவித்தனர். இதனால், சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் 207 ரன்களை எட்டியது. அல்லா கசன்பர் மற்றும் அஸ்வனி குமார் தலா 2 விக்கெட் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் மிட்செல் சான்ட்னர் தலா 1 விக்கெட் எடுத்திருந்தனர்.

இலக்கை நோக்கி.
208 ரன்கள் என்ற இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி துரத்தியது. முதல் ஓவரை அகேல் ஹொசைன் வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் டேனிஷ் மலேவர் டக்-அவுட்டானார். முகேஷ் சௌத்ரி வீசிய அடுத்த ஓவரில் டி காக் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து அகேல் ஹொசைன் வீசிய 3ஆவது ஓவரில் நமன் திர் டக்அவுட்டானார்.
அடுத்து 4வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா இணைந்து நீண்ட பார்ட்னர்ஷிப்பை அளித்தனர். 56 பந்துகளில் 73 ரன்களை சேர்த்தனர். அவர்கள் ஓரளவு ரன்களை அடிக்க தொடங்கும்போது விக்கெட் சரிய தொடங்கியது.

19 ஓவர்களில் 104 ரன்களுக்கு.
திலக் வர்மா 29 பந்துகளில் 5 பவுண்டரி 37 ரன்கள் எடுத்தபோது, ஹொசைன் ஆட்டமிழந்தார். அடுத்து ஹர்திக் பாண்டியா 1, ஷெர்ப்பேன் ரூதர்போர்ட் 0, சூர்யகுமார் யாதவ் 36 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசியாக ஷர்துல் தாகூர் 6, கிரிஷ் பகத் 7, ஜஸ்பிரித் பும்ரா 2 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால், 19 ஓவர்களில் 104 ரன்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஆல்-அவுட்டானது. அகேல் ஹொசைன் 4 விக்கெட், நூர் அகமது 2, முகேஷ் சௌத்ரி, அன்சுல் கம்போஜ், ஜேமி ஓவர்டன், குர்ஜப்னீத் சிங் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சஞ்சு சாம்சன் புதிய சாதனை
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சஞ்சு சாம்சன் 2 சதம் அடித்து புதிய சாதனையை படைத்துள்ளார். அதாவது, ஒரே சீசனில் 2 சதங்களை பதிவு செய்த சி.எஸ்.கே. வீரர் என்கிற பெருமையையும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதல் சதம் விளாசிய சி.எஸ்.கே. வீரர் என்கிற சாதனையையும் படைத்தார்.

மும்பை அணிக்கு எதிராக முதல் சதம் விளாசிய சி.எஸ்.கே. வீரர்
ஏற்கனவே, டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 115 ரன்கள் குவித்திருந்த அவர், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 101 ரன்கள் குவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved