news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews தோனி இம்முறையும் விளையாடமாட்டார் என தகவல்
tv

Also Watch

tv

Read this

தோனி இம்முறையும் விளையாடமாட்டார் என தகவல்

CSK

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
MS Dhoni

இன்று சென்னை - குஜராத் அணிகள் மோதல் :

இன்று சென்னையில் நடைபெறும் போட்டியிலும் சிஎஸ்கே வீரர் தோனி விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சென்னை - குஜராத் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறவுள்ளது. தொடர்ந்து 7 போட்டிகளில் களமிறங்காத தோனி, இப்போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

தோனி வேண்டுமென்றே விளையாடுவதை தவிர்க்கிறார் :

தோனி வேண்டுமென்றே சென்னை அணியின் பிளேயிங் லெவனில் இணைந்து விளையாடுவதை தவிர்த்து வருவதாக நியூசிலாந்து முன்னாள் வீரர் சைமன் டௌல் கருத்து தெரிவித்துள்ளார். புதிய தலைமையின் கீழ் அணி சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதற்காக தோனி விலகியிருப்பதாக தெரிவித்த சைமன் டௌல், தனது இருப்பு ருதுராஜைப் பாதிக்க கூடாது என்பதில் அவர் உறுதியாக இருப்பதாகவும் பாராட்டினார்.

சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் நம்பிக்கை :

வரும் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் அதிக ரன்களை குவிப்பார் என அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் நம்பிக்கை தெரிவித்தார். இது குறித்த பேசிய ஸ்டீபன் பிளமிங், ருத்ராஜ் கெய்க்வாட் திறமை குறித்து தங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளதாகவும், வெளியே அவர் மீது விமர்சனங்கள் இருந்தாலும் அணிக்குள் நல்ல ஆதரவு உள்ளது என்றார்.

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி :

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்திய ஐதரபாத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்களை குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய ஐதரபாத் அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி 18புள்ளி 3 ஓவர்களில் இலக்கை அடைந்தனர்.

அதிக ரன்களை சேஸ் செய்த அணி என்ற பெருமை :

ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை சேஸ் செய்த அணி என்ற பெருமையை பஞ்சாப் அணி தக்க வைத்துள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 264 ரன்கள் குவித்த நிலையில், அதனை பஞ்சாப் அணி எளிதாக சேஸிங் செயது அசத்தியது. இதற்கு முன்னர் 2024 ஆம் ஆண்டு கொல்கத்தா அணி அடித்த 262 ரன்களை பஞ்சாப் அணி சேசிங் செய்தது.

முதல் 5 வீரர்கள் பட்டியலில் பஞ்சாப் வீரர் பிரப்சிம்ரன் :

ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் எடுத்த முதல் 5 வீரர்கள் பட்டியலில் பஞ்சாப் அணி வீரர் Prabhsimran Singh இடம் பிடித்துள்ளார். நேற்றைய டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 23 பந்துகளில் 71 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்த பட்டியலில் 5 ஆம் இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா முதல் இடத்தில் உள்ளார்.

டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் லுங்கி நிகிடி டிஸ்சார்ஜ் :

காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி, மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், தலையில் ஏற்பட்ட கடுமையான காயத்தைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி அபார ஆட்டம் :

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி நடப்பாண்டு ஐபிஎல் இன்னிங்சில் தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார். 15 வயதை மட்டுமே எட்டிய சூரியவன்ஷி ஐபிஎல் போட்டிகளில் அனுபவ வீரர்களுக்கு இணையாக தன பங்களிப்பை கொடுத்து வருகிறார். அந்த வகையில் ஐதரபாத் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய சூரியவன்ஷி 36 பந்துகளில் 103 ரன்களை குவித்தார்.

சென்னை வீரர் அகேல் ஹொசைன் பிறந்த நாள் கொண்டாட்டம் :

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர் அகேல் ஹொசைன் பிறந்த நாளை சென்னை அணி வீரர்கள் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவை சிஎஸ்கே அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. சென்னை வீரர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்ட இந்த கொண்டாட்ட வீடியோவில் தோனியும் பங்கேற்றுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

பேட்மிண்டன் போட்டிகளில் புள்ளிகள் வழங்கும் முறையில் மாற்றம் :

சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளுக்கான புள்ளிகள் வழங்கும் முறையில் உலக பேட்மிண்டன் சம்மேளனம் மாற்றம் கொண்டு வந்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள பெஸ்ட் ஆஃப் த்ரீ போட்டிகளில் 21 புள்ளிகள் வழங்கும் முறை நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக 15 புள்ளிகள் வழங்கும் புதிய முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விதி 2027 ஜனவரி 4 முதல் நடைமுறைக்கு வருகிறது.

Related Link
ஐபிஎல் 2026 : சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பையை வீழ்த்தியது எப்படி?

ஐபிஎல் 2026 : சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பையை வீழ்த்தியது எப்படி?




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த 3 பேர் கைது

2
9 hrs 2 mins agoshare
லாட்டரி விற்பனை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved