Also Watch
Read this
By: Manigandan Raja

படப்பிடிப்பு தள புகைப்படத்தை பகிர்ந்தார் சிலம்பரசன் :
அரசன் படப்பிடிப்பு மீண்டும் துவங்கிய நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் வெற்றிமாறனுடன் இருக்கும் புகைப்படத்தை நடிகர் சிலம்பரசன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். முன்னதாக சிலம்பரசன் - தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அரசன் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது.
டார்லிங் படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட திரையரங்கில் ரகளை :

நடிகர் பிரபாஸின் டார்லிங் திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகியிருக்கும் திரையரங்கில், ரசிகர் ஒருவரை திரையரங்க ஊழியர்கள் கம்பு மற்றும் செருப்பினால் சரமாரியாக தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு சிலர் பாடல்களை மீண்டும் திரையிடுமாறு கேட்டதால் அந்த நபர் தாக்கப்பட்டதாகவும், வேறு சிலர் பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்டதால் அவர் தாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
புகைப்படக் கலைஞரை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய பாடகி ரிஹானா :

அமெரிக்க பாப் பாடகியும், தொழிலதிபருமான ரிஹானா, மும்பையில் புகைப்படக் கலைஞர் ஒருவருடன் நெருங்கி நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட வீடியோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் Fenty Beauty எனும் தனது அழகுசாதன நிறுவனத்துடன் தொடர்புடைய பேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரிஹானா, சிவப்பு கம்பள வரவேற்பின் போது தன்னுடன் புகைப்படம் எடுக்க விரும்பிய புகைப்படக் கலைஞரை அருகில் அழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
வச்சிந்தம்மா பாடலுக்கு நடனமாடி வைரலான இன்ஸ்டா பிரபலம் :

கீதா கோவிந்தம் படத்தில் இடம்பெற்ற வச்சிந்தம்மா பாடலுக்கு நடனமாடிய இன்ஸ்டாகிராம் பிரபலத்தின் வைரல் வீடியோவிற்கு, அந்த படத்தில் நடித்து தற்போது நிஜ வாழ்விலும் தம்பதிகளாக இணைந்துள்ள விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா பாராட்டு தெரிவித்துள்ளனர். டைமிங் அபாரம் என விஜயும், மிக சிறப்பான நடனம் என ராஷ்மிகாவும் பாராட்டி பதிவிட்டுள்ளனர்.
நடிகர் அர்ஜுனின் புதிய படத்தின் தலைப்பு அறிவிப்பு :

அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் அர்ஜுன் நடித்துள்ள புதிய படத்திற்கு ‘BLAST' என பெயரிடப்பட்டுள்ளதாக, படக்குழு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநரான சுபாஷ் கே ராஜ், அப்பா - மகளுக்கு இடையே நடக்கும் கதைக்களத்தை வைத்து இந்தப்படத்தை உருவாக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
அபிராமி, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு, கே.ஜி.எப் படத்தின் இசையமைப்பாளர் ரவி பசூர் இசையமைத்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved